Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 266 (09/08/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 265 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 20,26,27

இடமிருந்து வலம்

01 – 05 மனோதத்துவப்படி இவ்வாறான சொற்கள் கேட்கும் வண்ணம் அமையும் பட்சத்தில் ஆயுள் அதிகரிக்கும் என்கின்றனர்.
07 – 10 பெண்களுக்கு அழகு சேர்ப்பவற்றுள் ஒன்றான இது இதிகாச காவியங்களிலும் இடம் பிடித்துள்ளது (வலமிருந்து இடம்)
13 – 14 விமர்சிக்கும் சித்திரமாகவும் அமையும் (வலமிருந்து இடம்)
15 – 18 வசந்த ராகமாகவும் மங்களம் நிறைந்ததாகவும் கூறப்படுவது
31 – 33 திசுக்களின் அளவை அடிப்படையாகக் கொண்டு இதன் தாக்கம் தீர்மானிக்கப்படுகிறது
35 – 36 ஒரு வகைத் தொகுப்பான இது பிரபந்த வகைகளுள் ஒன்று

மேலிருந்து கீழ்

01 – 19 இதிலிருந்து பெறப்படும் பானம் புத்துணர்ச்சி தருவதாக சீனர்களின் நம்பிக்கை
19 – 31 எவ்வித கழிவெச்சங்கள் படிந்தாலும் சில மணி நேரத்தில் தூய்மை அடைவதாக கருதப்படுகிறது (கீழிருந்து மேல்)
09 – 21 கற்பனைகளின் உறைவிடம் (குழம்பி வருகிறது)
22- 34 கசப்பான அனுபவங்களும் பெற்றுத் தருவது
05 – 29 ஒரு வகை சக்தியான இது மனதை செம்மைப்படுத்தவும் உதவும் (கீழிருந்து மேல்)
06 – 12 புலனாய்வுகளின் போது சில விடயங்களை வெளிக்காட்ட கூடிய அடையாளங்களுள் ஒன்று
24 – 36 உணர்வுகளுக்கும் அவசியமானது

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 266 (09.08.20)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 265 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.ஜெனி அன்ரன் , ஐக்கிய இராச்சியம்

திருமதி.ஜெனி அன்ரன்   அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 265 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 16 திருக்குறள்
07 – 10 சிந்தனை
10 – 12 தணல்
13 – 15 உறவு
16 – 18 கரம்
21 – 23 சுடர்
31 – 34 நாடகம்

மேலிருந்து கீழ்

01 – 13 உந்தி
13 – 31 உருவம்
14 – 26 பறவை
16 – 34 நாட்டம்
17 – 29 அரசு
18 – 36 கண்ணீர்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 265 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.பாரதி, ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 265 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...