trttamilolli

 

நைஜீரியா போகோஹராம் தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் பலி

நைஜீரியாவில் போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள டம்போவா நகரத்தில் நேற்று இரவு போகோஹராம் கிளர்ச்சியாளர்கள் இரண்டு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 31 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


வாஜ்பாய் உடல்நலம் குறித்து சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரிப்பு

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குறித்து ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று விசாரித்தார். 1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வாஜ்பாயின் உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்ததால் அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, தொடர் சிகிச்சை காரணமாக வாஜ்பாய்க்கு சிறுநீரக தொற்று சரியாகி வருகிறது. ஆனாலும், டாக்டர்கள் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அவரது உடல் நிலையை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலமேலும் படிக்க…


கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மோதிரம் குஜராத் மாநிலத்தில் ஏலத்திற்கு வர உள்ளது. தாமரை போன்று தோற்றம் அளிக்கும் அந்த மோதிரத்தில் 36 இதழ்கள் இடம்பெற்றுள்ளது. இதன் மொத்த எடை 58 கிராம் ஆகும். விஷால் மற்றும் குஷ்பூ விஷால் எனும் தம்பதியர் வடிவமைத்த இந்த மோதிரத்தின் மதிப்பு சுமார் ரூ.27 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஏலத்தின் போது மோதிரத்தின் ஆரம்பகட்ட விலை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் என்பதால் இதனை வாங்க இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளவர்களும் அதிக ஆர்வம் காட்டிமேலும் படிக்க…


‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ கிளிநொச்சியில் ஆரம்பம்

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஏற்படுத்தப்பட்ட ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணையில் இடம்பெற்றது. நாட்டில் நிலவும் வரட்சி மற்றும் நீர் முகாமைத்துவத்தினைப் பாதுகாக்கும் நோக்குடன் சுற்று சூழல் பாதுகாப்பு விசேட வேலைத்திட்டமாக இந்தத் திட்டம் அமைகின்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சந்ரட்ண பல்லேகமவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 2000 பலாக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன. இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவிக்கையில், “கடந்த சுற்றாடல் தினத்தன்று ஜனாதிபதி சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்களை அறிவித்திருந்தார். அந்தவகையில் ‘பாலைவனத்திற்கு எதிரான போராட்டம்’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக மரங்களை நாட்டும் செயற்பாடுகளை இன்றுமேலும் படிக்க…


வாக்கு வங்கியில் ஏன் சரிவு ஏற்பட்டது? – சுமந்திரன் விளக்கம்

மக்களிடம் எமது செயற்பாடுகள் தொடர்பில் சரியான தகவல் சென்றடையாத காரணத்தினாலே கடந்த தேர்தலில் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றைய தேர்தலை விடவும் வித்தியாசமானது. அதில் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அதிகமான கட்சிகள் போட்டியிட்ட தேர்தல். அதை மற்றைய தேர்தல்களோடு ஒப்பிட முடியாது. புதிய அரசியலமைப்பு உருவாக்கக் கூடிய சாத்தியக்கூறு இருக்கின்ற வரையில் நாம் பலருடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிலையுள்ளது. அதேவேளை பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் இருக்கின்ற சூழலில் எதிர்ப்புக் காட்டவேண்டிய வேண்டிய தேவையும் இருக்கின்றது. எனவே எமது செயற்பாடுகள் தொடர்பில்மேலும் படிக்க…


மல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்

யாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு உள்ளது. மோதல் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்த வேளை காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டு உள்ளது.அதனை அடுத்து காவல்துறையினர்; மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்


உறுதி செய்யப்பட்ட 80KM/h வேகக்கட்டுப்பாடு! – ஜூலை 1 முதல் கட்டாயம்!

நீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் இந்த புதிய வேகக்கட்டுப்பாடு செயற்படுத்தப்பட உள்ளது. பிரான்சின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 90 கிலோமீட்டர்கள் இருந்தது. இந்நிலையில் இந்த வேகத்தினை மணிக்கு 80 கிலோமீட்டர்களாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே இது அரச தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு தரப்பினரின் ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிகையினல் இந்த முடிவு பிற்போடப்பட்டிருந்தது. கடந்த மாதம் இந்த வேகப்பட்டுப்பாடு செயற்படுத்தப்பட்டிருந்த போது வீதி விபத்துக்களும், விபத்தின் போது ஏற்படும் உயிரிழப்புக்களும் கணிசமாக குறைந்திருந்தன. இந்நிலையில், வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் கட்டாயமாட்டப்பட உள்ளது. பிரதமர் எத்துவாபிலிப் தெரிவிக்கும் போது, ‘பிரபலத்தன்மையை இழக்க நான் தயார். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டினால் வருடத்துக்கு 300 இல் இருந்து 400 உயிர்கள் பாதுகாக்கப்படும்!’ என தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க…


ஜூலை மாதத்திலும் தொடரும் பணி பகிஷ்கரிப்புக்கள்! – தொடரூந்து தொழில் சங்கம் அறிவிப்பு!

மே மாதம் மற்றும் ஜூன் மாதத்தை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற உள்ளதாக சொழிற்சங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்களில் சட்ட மசோதாவில் பல்வேறு புதிய கோரிக்கைகளை கேட்டு, SNCF தொழிற்சங்க ஊழியர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவது வாசகர்கள் அறிந்ததே. 300 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான அரசுக்கு இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை CGT தொழிற்சங்க பொதுச் செயலாளர் Laurent Brun தெரிவிக்கையில், ‘ஜூலையிலும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளோம். எவ்வ்ளவு நாட்கள் தான் நீடிக்கின்றது என நாம் பார்ப்போம்!’ என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்ட இருநாட்கள் பணி பகிஷ்கரிப்பின் போதும், பயணிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டிருந்த கருத்துக்கணிப்பில்,  அரசுக்கு எதிராக பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் பணி பகிஷ்கரிப்பு தொடர உள்ளதுமேலும் படிக்க…


டிரம்ப் அரசின் நடவடிக்கை – அமெரிக்காவில் 2 ஆயிரம் குழந்தைகள், பெற்றோரிடம் இருந்து பிரிப்பு

டிரம்ப் அரசின் நடவடிக்கையால் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி, மே 31-ந் தேதி வரையிலான 6 வார காலத்தில் 1,995 குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்காவுக்கு மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக எல்லை தாண்டி வருகிறவர்கள் மீது டிரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, பெரியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்களுடன் வருகிற குழந்தைகள், பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து பிரிக்கப்படுகின்றனர். அவர்கள், ஆதரவற்றவர்களாக வகைப்படுத்துப்படுகின்றனர். இந்த குழந்தைகள் அமெரிக்க அரசின் சுகாதாரத்துறை மற்றும் மனிதாபிமான சேவைகள் துறையின் பராமரிப்புக்கு மாற்றப்பட்டு, அரசு தடுப்பு முகாம்களுக்கும், குழந்தை வளர்ப்பு மையங்களுக்கும் மாற்றப்படுகின்றனர். அந்த வகையில் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி, மே 31-ந் தேதி வரையிலான 6 வார காலத்தில் 1,995 குழந்தைகள் இப்படி பெற்றோரிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுமேலும் படிக்க…


கிளாஸ்கோ நகரத்தில் பெரும் தீ விபத்து – பிரசித்தி பெற்ற கலைப்பள்ளி கட்டிடம் நாசம்

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் உலக பிரசித்தி பெற்ற ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் உலக பிரசித்தி பெற்ற ‘ஸ்கூல் ஆப் ஆர்ட்’ என்னும் கலைப்பள்ளி உள்ளது. இந்த கலைப்பள்ளியில் மாகிந்தோஷ் கட்டிடத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11.15 மணிக்கு தீப்பிடித்தது. இந்த தீ அந்த கட்டிடம் முழுவதும் பரவியதுடன், அதையொட்டி அமைந்து உள்ள இரவு விடுதி வளாகம், இசை அரங்கத்துக்கும் பரவியது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 120 தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீ வானளாவ கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே தீயணைப்பு படையினர் போராட வேண்டியது ஆயிற்று. இது பற்றிமேலும் படிக்க…


லண்டன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரிப் மனைவி அறைக்குள் புகுந்த மர்ம நபர் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மனைவி குல்சூம் சிகிச்சை பெற்றுவரும் லண்டன் மருத்துவமனையில் அவரது அறைக்குள் புகுந்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரிப்பின் மனைவி குல்சூம் ஷெரிப்(68). புற்றுநோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட குல்சூம் பல மாதங்களாக லண்டன் நகரில் உள்ள வீட்டில் தங்கியவாறு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கணவர் நவாஸ் ஷெரிப், மகள் மரியம் ஷெரிப் உள்ளிட்டோர் பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது லண்டன் சென்று அவரை பார்த்துவிட்டு வருவதுண்டு. அவ்வகையில், நேற்று நவாஸ் ஷெரிப், மகள் மரியம் ஷெரிப் ஆகியோர் குல்சூமை பார்ப்பதற்காக கடந்த வியாழக்கிழமை விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்று சேருவதற்குள் நேற்று பின்னிரவில் கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட குல்சூம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.மேலும் படிக்க…


மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம் – இங்கிலாந்து அரசு

மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியாவை இங்கிலாந்து அரசு நீக்கியது. இதனால் இங்கிலாந்து சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் கடுமையான விதிமுறைகளை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்காக ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இவர்கள் விசா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் விதிமுறைகள் இதுவரை சற்று எளிமையாக இருந்தது. இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி முதல் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய 4 அடுக்கு விசா விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மாணவர்கள் எளிதாக விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. 4 அடுக்கு விசா தொடர்பான குடியேற்ற கொள்கை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.மேலும் படிக்க…


அமெரிக்காவில் சர்வதேச யோகா விழா தொடங்கியது

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் யோகாசன விழாக்கள் களைகட்ட தொடங்கி விட்டது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் ஒருவார கால யோகாசன விழாக்கள் களைகட்ட தொடங்கி விட்டது. நியூயார்க் நகரில் நடைபெற்ற இரண்டுமேலும் படிக்க…


நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பினார் கிரீஸ் பிரதமர்

மகடோனியா நாட்டுடன் செய்த ஒப்பந்தத்துக்கு எதிராக கிரீஸ் நாட்டின் பிரதமர் அலெக்சிஸ் ட்சிப்ராஸ் பதவி விலக பாரளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது. கிரேக்க நாடு என்றழைக்கப்படும் கிரீஸ் நாட்டுக்கும் அண்டை நாடான மகடோனியாவுக்கும் கடந்த 1991-ம் ஆண்டு முதல் மகடோனியா நாட்டின் பெயர் தொடர்பான சர்ச்சை நிலவி வருகிறது. பண்டைக்கால கிரேக்க நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க மகடோனியா என்னும் முக்கிய நகரின் பெயரில் மகடோனியா நாட்டின் பெயரும் அமைந்துள்ளதற்கு கிரீஸ் நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் பெயரை மகடோனியா குடியரசு என்று மாற்றிகொண்டால் ஐரோப்பிய யூனியனில் இடம் பெறவும், நாட்டோ கூட்டு ராணுவப்படையில் சேர்த்து கொள்வதற்கும் ஆதரவு தருவதாக தற்போதையை கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் ட்சிப்ராஸ் மகடோனியாவுடன் சமீபத்தில் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,மேலும் படிக்க…


அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு

டெல்லி கவர்னர் அலுவலகத்தில் தர்ணா நடத்திவரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, பினராயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜால் கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர். இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார். பின்னர்மேலும் படிக்க…


இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் 7 நாள் பயணமாக சுஷ்மா புறப்பட்டு சென்றார்

ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 7 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதற்காக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 7 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின் முதல்கட்டமாக இத்தாலி சென்றடையும் சுஷ்மா அந்நாட்டின் பிரதமர் கியூசெப்பி கான்ட்டே மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி என்ஸோ மோவேரோ மிலான்சேய் ஆகியோரை சந்தித்து இந்தியா – இத்தாலி இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். 19-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்லும் அவர், பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜேன் எய்வெஸ் லி டிரியான் மற்றும் உயரதிகாரிகளை சந்திக்கிறார். 20-ம் தேதி லக்சம்பர்க் நாட்டுக்கு சென்று அந்நாட்டின்மேலும் படிக்க…


மிசோராம் மாநிலத்தில் 15 குழந்தை பெற்றால் பெண்களுக்கு பரிசு – சமூக அமைப்பு அறிவிப்பு

மிசோரம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெருகவும், வெளிமாநிலத்தினர் குடியேறுவதை தடுப்பதற்காகவும் 15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று சமூக அமைப்பு அறிவித்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை 130 கோடியை தாண்டி சென்று விட்டதால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சில ஜாதி, இன அமைப்புகள் தங்கள் சமூகத்தினர் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதும் ஆங்காங்கே நடக்கிறது. இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஒரு அமைப்பு தங்கள் மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறது. மேலும் 15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.மேலும் படிக்க…


“தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் எமது ஆட்சியில் எல்லை மீறிய சந்தர்பங்களும் உண்டு”

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் கூறி தனிநபர் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் கடந்த ஆட்சியில் இடம்பெற்றது என, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரத்துபஸ்வெல சம்பவம், இதற்கு முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தென் மாகாண உறுப்பினர்கள் சந்திப்பு இன்று அம்பலாங்கொடையில் இடம்பெற்றது.  இதன் போது கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ , “எமது ஆட்சி காலத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன. தேசிய பாதுகாப்பைப் போன்று தனிநபர் பாதுகாப்பு குறித்தும் கவனத்தில் கொள்கின்ற நிலையே தற்போது உலகில் காணப்படுகின்றது. தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது. தனிநபர் சுதந்திரம், தகவலறியும் உரிமைச்சட்டம் மற்றும் ஊடக சுதந்திரம் என்பன முக்கியமானதாகவே கருதப்படுகின்றது. ஆனால் எமது ஆட்சி காலத்தில் காணப்பட்ட சூழல் இத்தகைய சுதந்திரங்களை கட்டுப்படுத்துவதாகவேமேலும் படிக்க…


காணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது

இலங்கை யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேர் பற்றிய பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு வெளியிட்டுள்ளது. இப் பட்டியலில் குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பில் இலங்கை அரசு, விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அவர்களைக் கண்டுபிடித்தல் மற்றும் பாதுகாத்தலை ஐநா வலியுறுத்துவதாக காணாமலாக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் தலைவர் சுயெலா ஜனினா கூறியுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொரு நொடியும் கலக்கத்தில் இருப்பதாகவும் அவர்களது நிலமையை கருத்தில் கொண்டு விரைவான நடவடிக்கைக்காக காணாமல் ஆக்கப்பட்டடவர்களின் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சுயெலா ஜனினா குறிப்பிட்டார். இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப தலையீடு செய்யப்படவேண்டும் என்றும் எவ்விதமான விசாரணைகளையும் செய்யாமல் தீர்வுக்காக காத்திருக்குமாறு சொல்வது நியாயமற்ற செயல் என்றும் காணாமலாக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் தலைவர் சுயெலா ஜனினாமேலும் படிக்க…


தேரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூவர் கைது

கிரிவெஹார ராஜ மகாவிகாரையின் விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரரர் மீது துப்பாக்கி சூடு நடத்திய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அசேல பண்டார என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபராவார். ஏனைய இருவரும் இவரது இரட்டைச் சகோதரர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


வளர்ப்புத் தாயிற்காக நாடு விட்டு நாடு வந்து கண்ணீருடன் அஞ்சலி

டுபாய் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாக தொழில் புரிந்துவந்த இலங்கை ஜா-எல கப்புவத்தை பகுதியை சேர்ந்த  பெண்ணொருவர் சுகவீனமடைந்து மரணித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, டுபாயில்  குறித்த பெண் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் உட்பட ஆறு பேர் இலங்கை வந்திருந்தனர். டுபாயில் இருந்து வந்தவர்கள் அம்மா, அம்மா என கதறி அழுதபடி இலங்கை பெண்ணின் சவப்பெட்டி தோளில் சுமந்து சென்ற காட்சி அனைவரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. கப்புவத்தை பிரதேசத்தை சேர்ந்த சாந்தி பெரேரா என்ற இந்த பெண் நான்கு பிள்ளைகளை பராமரிக்கும் சேவைக்காக கடந்த 1981 ஆம் ஆண்டு டுபாய்க்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர் மேலும் நான்கு பிள்ளைகள் என எட்டு பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பு சாந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. சாந்தி திருமணமாகாதவர். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சாந்தி நல்லமேலும் படிக்க…


விரைவில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் – சம்பந்தன்

கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் விரைவில் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற தமிரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இச் செயற்குழு கூட்டத்தில் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் கலந்துகொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில், கேப்பாபுலவு மக்களின் காணிவிடயம் சம்மந்தமாக தமிழரசுக் கட்சியின் முயற்சி நீண்டகாலமாக தொடர்ந்துள்ளது. அண்மையில் 136 ஏக்கர் காணி விடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவும் மேலும் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் 73 ஏக்கர் விடுபட வேண்டும். இந்த காணிவிடுவிப்பு சம்பந்தமாக நாங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது குறித்த கடந்த வியாழக்கிழமை நான் ஜனாதிபதியினை சந்தித்துமேலும் படிக்க…


சங்கமம் – 17/06/2018


மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 19 ஆயிரம் பேர் கைது

மலேசியாவில் கடந்த 5 மாதங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய அரசு வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. பதிவுச்செய்யப்படாத தொழிலாளர்கள் மீது பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 4,000 இந்தோனேசிய தொழிலாளர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அருகாமை நாடுகளை குறி வைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதிகளிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர். இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவித ஆவணங்களுமின்றி பணியில் வைத்துள்ளனர். இந்நிலையில், சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர்மேலும் படிக்க…


ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை?

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தொடரப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கில் வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை ஏற்றுக்கொண்டார். போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற ரியல்மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ரியல்மாட்ரிட் அணிக்காக ஆடுவதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ அந்த நாட்டு அரசுக்கு சரியாக வருமான வரி செலுத்தவில்லை. இதனால் அவர் மீது வரிஏய்ப்பு வழக்கு தொடர்ந்து ஸ்பெயின் அரசு விசாரணை நடத்தியது. இந்த நிலையில் ரொனால்டோ, வருமானவரித்துறையுடன் சமரச தீர்வு கண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 2 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.148 கோடி அபராதம் செலுத்தவும் அவர் சம்மதம் தெரிவித்து இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக 2 ஆண்டு தண்டனை பெறுபவர்கள் சிறைவாசம்மேலும் படிக்க…


விஜய் மல்லையா ரூ.1 கோடி வழங்க வேண்டும்- இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

இந்திய வங்கிகளுக்கு வழக்கு செலவாக விஜய் மல்லையா ரூ.1 கோடியே 80 லட்சம் வழங்க வேண்டும் என்று இங்கிலாந்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 13 இந்திய வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்து விட்டார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இங்கிலாந்து கோர்ட்டில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், விஜய் மல்லையாவின் உலகளாவிய சொத்துகளை முடக்குவதற்கு இந்திய கோர்ட்டு உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயமும் விஜய் மல்லையாவிடம் இருந்து கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது. சொத்துகளை முடக்கும் உலகளாவிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, இங்கிலாந்து ஐகோர்ட்டில் விஜய் மல்லையா முறையிட்டார். ஆனால், கடந்த மாதம்மேலும் படிக்க…


பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொலை: பாகிஸ்தானின் உளவு அமைப்பு தான் காரணம் -மத்திய அரசு குற்றச்சாட்டு

காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியரான சுஜாத் புகாரி (வயது 50), நேற்று முன்தினம் தனது காரில் சென்று கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் அவரது கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுஜாத் புகாரியும், அவருடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி மெகபூபா முப்தி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில்மேலும் படிக்க…


புதிய அரசியலமைப்பு: நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில்

புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடலுக்கான நிபுணர் குழுவின் அறிக்கை இம்மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கைகளை, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான ஆவணமொன்றாக தயாரிக்கும் பொறுப்பை கடந்த மாதம் இடம்பெற்ற அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த அறிக்கையை தயாரிப்பதற்கான நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அறிக்கை இம்மாத இறுதிக்குள் கையளிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல சூரியனின் செய்திப் பிரிவிடம் தெரிவித்தார். குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டதன் பின்னர், அதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழு கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


அரசியல் சமூக மேடை – 14/06/2018


இசையும் கதையும் – 16/06/2018

முகநூல் (பாகம் I) எழுதியவர் : செல்வி.அஞ்சனா குகன் , சுவிஸ்


தொடரும் அஞ்சல் பணியாளர்களின் பணிப் புறக்கணிப்பு – பரீட்சைகள் திணைக்களத்தின் மாற்று ஏற்பாடு

தமது பணிப்புறக்கணிப்பு இன்று ஆறாவது நாளாகவும் தொடர்வதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகளுக்கு எந்தவொரு தீர்வும் இதுவரை பெற்று தரப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அஞ்சல் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பரீட்சை கட்டணங்களை, பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. குறித்த காரியாலயங்களில் இதற்காக விசேட நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இதன்போது, இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட நாட்டின் சமகால நிலவரம் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


போலி நியமனக் கடிதங்கள் மூலம் தேசிய பாடசாலைகளுக்கு ஊழியர்கள் நியமனம்

போலி நியமனக் கடிதங்கள் மூலம் வட மாகாணத்திற்குட்பட்ட தேசிய பாடசாலைகளுக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற நியமனக் கடிதத்தினை ஒத்த போலி நியமனக் கடிதங்களை தயாரித்து வட மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 63 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளுக்கான நூலக உதவியாளர்கள், முகாமைத்துவ ஊழியர்கள் மற்றும் சாதாரண ஊழியர்கள் என்ற பதவிகளுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு நியமனம் பெற்ற 8 ஊழியர்கள் பாடசாலை அதிபருக்கு நியமனக் கடிதங்களைக் கையளித்த போது, அவை கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற நியமனக் கடிதங்களை விட மாறுபட்டு இருந்தமையால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பாடசாலை அதிபர் அறிவித்துள்ளார். அதன் பின்னர் குறித்த கடிதங்கள் போலி நியமனக் கடிதம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசேட விசாரணை ஆணைக்குழு அமைத்து, நடவடிக்கைமேலும் படிக்க…


சமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது

சமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள றமழான் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மானிட வர்க்கத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது எனவும் ஜனாதிபதி விடுத்துள்ள வாழத்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் ஒருமாத காலம் நோன்பு நோற்று புதிய பிறையைக் கண்டதன் பின்னர் இன்று (சனிக்கிழமை) றமழான் பெருநாளை கொண்டாடுகின்றனர். அதனை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை தெரிவித்துள்ளனர். இதேவேளை ஆன்மீக, சமூகம் சார்ந்த பெறுமதிகள் உலகிற்கு ஒளியூட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்னிறுத்தி சகோதர முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான பெருநாளாக அமைய வேண்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என பிரதமர் விடுத்துள்ள றமழான் பெருநாள் வாழ்த்துச் செய்தியில்மேலும் படிக்க…


பாடுவோர் பாடலாம் – 15/06/2018

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்தியை தொடர்ந்து


பாடுவோர் பாடலாம் – 10/06/2018

பிரதி ஞாயிறு தோறும் 15.10 – 16.00 மணி வரை


மீள் பார்வை – சக்தியின் மின்னல்


பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெயக்குமார் நிதர்ஷன் (16/06/2018)

பிரான்ஸ் Évry இல் வசிக்கும் ஜெயக்குமார் காஞ்சனா தம்பதிகளின் செல்வப்புதல்வன் நிதர்ஷன் இன்று 16ம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை தனது பிறந்தநாளை அன்பு சகோதரிகளுடன் இணைந்து இல்லத்தில் கொண்டாடுகிறார். இன்று பிறந்த நாளை கொண்டாடும் நிதர்ஷனை அன்பு அப்பா அம்மா அப்பம்மா தங்கைமார் சோபி அபிராமி சித்தப்பாமார் சித்திமார் தம்பிமார் தங்கைமார் மாமனார் அத்தைமார் மச்சான்மார் மச்சாள்மார் மற்றும் தாயகத்தில் வசிக்கும் பூட்டி அம்மப்பா அம்மம்மா பெரியம்மாமார் பெரியப்பாமார் தங்கைமார் சித்திமார் சித்தப்பாமார் தம்பிமார் தங்கை மாமா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி உபாசகித்தாயின் ஆசியோடும் அருளோடும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். இன்று பிறந்தநாளை கொண்டாடும் நிதர்ஷனை தமிழ்  பணி புரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பார் போற்ற வாழ்கமேலும் படிக்க…


பாடுவோர் பாடலாம் – 08/06/2018

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்தியை தொடர்ந்து


விஸ்வரூபம் 2 – சரச்சைகளை வேண்டுமென்றே கிளப்புகிறாரா கமல்?


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !