Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 345 (14/05/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 345ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள்: 06, 14, 25

இடமிருந்து வலம்

01 – 05 நிகழக்கூடியதாக காரண அடிப்படையில் அமைவது
07 – 10 ஒரு குறிப்பிட்ட காலத்தை சேர்ந்தவர்கள்
19 – 20 இடம் அல்லது இலக்கு இரண்டிற்கும் தேவையானது
26 – 29 தாய்மையை நினைவூட்டும் வடு எனவும் கூறலாம்
31 – 33 விளையாட்டு வீரர்கள் செயற்கையாக பெற முயல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது
33 – 35 அறம் இல்லாதவிடத்து நிலைக்காத இது சிலருக்கு வேடிக்கையாவது

மேலிருந்து கீழ்

01 – 13 ஒரு துறையில் நிகழ்த்திய திறமைக்கும் மேலதிகமான செயலை இவ்வாறு அழைக்கலாம்
13 – 19 பண்டைய மக்களால் இசைக்குரியதாகவும் நோக்கப்பட்ட இது இன்றளவும் இசைக்கலைக்குரியதாகவும் உள்ளது (கீழிருந்து மேல்)
15 – 33 சந்தர்ப்பம்
16 – 28 அனைத்துயிர்களிடத்தும் காட்டப்படும் பரிவு
05 – 23 ஒரு வகை நஷ்டம் (கீழிருந்து மேல்)
12 – 18 குறிக்கப்பட்ட மதத்தினரிடையே முக்கியத்துவம் பெறுவது (கீழிருந்து மேல்)
18 – 36 இனம் மொழி அந்தஸ்து போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டு உருவாகும்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 345

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 344ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 நம்பிக்கை
08 – 09 தெரு
09 – 11 சுருள்
14 – 17 வெறுப்பு
27 – 30 அக்கினி
32 – 35 இயற்கை

மேலிருந்து கீழ்

01 – 31 நந்தவனம்
14 – 26 வெள்ளி
15 – 27 கிணறு
17 – 35 இனிப்பு
06 – 12 கதை
12 – 24 கவலை
24 – 36 அவனி

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 344ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

திருமதி. ஜெனி அன்ரன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 344ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி இராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி. சந்திரா கோபால், ஜேர்மனி
திரு. திக்கம் நடா, சுவிஸ்
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 344ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...