Main Menu

பிரேசிலில் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு: பலூன்களை வானில் பறக்கவிட்டு அஞ்சலி

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஒரு இலட்சத்தினை கடந்துள்ளது.

இந்நிலையில்  குறித்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.

ரியோ டி ஜெனீரோவிலுள்ள  Copacabana  கடற்கரையில் அரசு சாரா அமைப்பின் சார்பில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதாவது கடற்கரை பகுதி முழுவதும் சிவப்பு நிற பலூன்கள் மணலில் நடப்பட்டிருந்த சிலுவையில் கட்டப்பட்டிருந்தன.

பின்னர் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஒரே நேரத்தில் ஆயிரம் பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

பிரேசிலில் கொரோனாவால் இதுவரை 29இலட்சத்து 62ஆயிரத்து 442பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...