இலங்கை
கிரிஷ் ஒப்பந்த வழக்கு : 4ஆவது சந்தேகநபராக சிக்கிய நாமல் ராஜபக்ஷ

கிரிஷ் ஒப்பந்த வழக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நாமல் ராஜபக்சமேலும் படிக்க...
திலீபனின் சிலை அகற்றப் பட்டமைக்கு யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

திலீபனின் சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்டமைக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மாணவர் ஒன்றியம் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. நேற்று காலை 6.30 அளவில், திலீபனின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை காவல்துறையினர் அத்துமீறிமேலும் படிக்க...
அர்ச்சுனா, ஹரிஸ் உள்ளிட்ட அறுவருக்கு நீதிமன்றம் அழைப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக அவதூறு பரப்பிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. அவர்களை எதிர்வரும் ஒக்டோபர்மேலும் படிக்க...
ஐ.நா இலங்கையின் தவிர்க்க முடியாத பங்காளி – விஜித ஹேரத்

ஐக்கிய நாடுகள், இலங்கைக்கு தவிர்க்கமுடியாத ஒரு பங்காளராகும் என இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81 ஆவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்தமேலும் படிக்க...
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற திருட்டுகளால் பாரிய இழப்பு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் கேபிள்கள், செப்பு கம்பிகள் மற்றும் வீதி மின்விளக்குக் கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக 2024 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2021, 2022 மற்றும்மேலும் படிக்க...
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை கோரிக்கை!

தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை, சவூதி அரேபியாவில் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சவூதி அரேபியா இராச்சியத்திடம் அவசரமானதும்மேலும் படிக்க...
ஷானி அபேசேகர உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஷானி அபேசேகர, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்ன மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை உயர்மேலும் படிக்க...
விதிமீறினால் புள்ளிகள் குறையும்; சாரதிகளுக்கு எச்சரிக்கை

போக்குவரத்து விதி மீறல்களுக்கான ‘டிமெரிட்’ (குறைமதிப்பு) புள்ளிகள் முறை குறித்த ஆறு மாத கால முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (28) காலைமேலும் படிக்க...
ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) இன்று (28) இலங்கையின் தேசிய அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகத் தான்மேலும் படிக்க...
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் கைது

இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் தொகுதியுடன் இரண்டு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (27) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (PNB)மேலும் படிக்க...
பத்தேகம துப்பாக்கிச் சூடு – வௌியான மேலதிக தகவல்

பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் இன்று (27) காலை கார் ஒன்றில் வந்த குழுவினரால் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலதிக தகவல்களைப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில்மேலும் படிக்க...
பத்தேகமவில் துப்பாக்கிச் சூடு இருவர் காயம்

பத்தேகம பகுதியின் ஹல்படோட்டா (Halpatota) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது, காரில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலத்த காயமடைந்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் தகவலின்படி, தாக்குதலாளிகள் T-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்திமேலும் படிக்க...
வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் இன்று (27) அதிகாலை யாழ்ப்பாணம் மாதகல், குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொகையொன்றைக் கைப்பற்றியுள்ளனர். வடக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான படகுப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிறுவனத்தின் பணியாளர்களால்மேலும் படிக்க...
அகற்றப்பட்ட திலீபனின் திருவுருவச் சிலை!

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள திலீபன் நினைவாலயப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலை, யாழ்ப்பாண பொலிஸாரால் அகற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் இன்று (27) காலை 6.00 மணி முதல் 6.30 மணிக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
ஞானசாரவுக்கு பொதுமன்னிப்பு கோரி கையெழுத்து சேகரிப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கக் கோரி, 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் விசேட பிரசாரம் இன்று (26) மிஹிந்தலை புனித பூமியில் தொடங்கியது. மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதிமேலும் படிக்க...
22 வது திருத்தம் – நாட்டின் மக்களின் தோல்வி – சஜித்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் நாட்டின் 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமை இழக்கப்பட்டு, அவர்கள் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்றமேலும் படிக்க...
பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

உலகப் பல்கலைக்கழகங்களின் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் செயல்திறனை மதிப்பிடும் 2026 ஆம் ஆண்டுக்கான “UI GreenMetric World University Rankings” தரவரிசையில், பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் முதலிடப் பல்கலைக்கழகமாகத் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. “நிர்வாகம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்தமேலும் படிக்க...
சிலிண்டர் வெடித்ததில் வைத்தியசாலை ஊழியர்கள் ஏழு பேர் காயம்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலை சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிப்புச் சம்பவத்தால் வைத்தியசாலைமேலும் படிக்க...
மட்டக்களப்பில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழர் தேசத்தின் விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இன்று (26) மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 480
- மேலும் படிக்க

