Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 342 (23/04/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 342ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் : 17, 19

இடமிருந்து வலம்

01 – 05 பெறுமதி மிக்க சிலவற்றின் நிலவியல் சார்ந்தது.
07 – 09 மின்காந்த அலைகளால் பாதிப்படைப்பவற்றுள் ஒன்று (வலமிருந்து இடம்)
09 – 11 அதிக வருமானம் ஈட்டக்கூடியதெனினும் இழப்புக்களையும் தரக்கூடியது.
13 – 16 பண்டைய மரபுகளை காப்பது எனவும் கருதுவதுண்டு.
20 – 23 இதமான இது மூலிகைகளின் நறுமணமானால் நோய் தீர்க்கும் மருந்தாகவும் உள்ளது
26 – 28 மழையின் வருகையை உணர்த்தக்கூடியது (வலமிருந்து இடம்)
31 – 33 அன்புக்கானது அல்லது ஊக்குவிப்பிற்கானது

மேலிருந்து கீழ்

01 – 07 வேதியல் தொடர்பான உணர்வு எனவும் கூறலாம்
25 – 31 இயற்கையின் அழகினை மென்மேலும் மெருகூட்டும் (கீழிருந்து மேல்)
09 – 21 நற்செயலின் விளைவு
16 – 34 குறிப்பிட்ட நோக்கத்திற்கான அல்லது ஒத்தகருத்துடையது (குழம்பி வருகிறது)
23 – 35 திரவப் பொருட்கள் சிலவற்றின் பயன்பாட்டிற்கு உதவுவது (கீழிருந்து மேல்)
06 – 18 இந்து மதகோட்பாடுகளுள் இதுவும் அடங்கும்
18 – 36 புலன்களை மகிழ்விக்கும் வகையில் அமைவது

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 342 (23.04.23)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 341ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 அர்த்தம்
09 – 11 அடகு
15 – 17 வயல்
23 – 24 மீதி
25 – 29 பிரவாகம்
31 – 32 கண்
32 – 36 புத்தகம்

மேலிருந்து கீழ்

01 – 25 அனுபவம்
02 – 08 வேர்
14 – 26 கவிதை
09 – 33 அவசரம்
22 – 34 பித்து
06 – 24 ஒத்திகை
24 – 36 புதிர்

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 341ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. பத்மராணி இராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி. பத்மராணி இராஜரட்ணம் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 341ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. பத்மராணி இராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி. ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திரு திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி. சந்திரா கோபால், ஜேர்மனி
திரு. திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 341ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...