Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 328 (08/01/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 328ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் எதுவும் இல்லை

இடமிருந்து வலம்

01 – 06 ஆண் தெய்வங்களுக்கான வர்ணனைக்குரியது
09 – 11 இயற்கையின் கொடையான இது நீர்க்கோளத்தின் ஒரு கூறு (வலமிருந்து இடம்)
15 – 16 மழைக்கான அறிகுறிகளுள் அகவும் இதன் அழகும் உள்ளடங்கும்
20 – 22 மகப்பேற்றுடன் தொடர்புடையது என முன்னோர்கள் நம்பியதால் பெண்களுக்கு அவசியமானதென வலியுறுத்தப்பட்டது (வலமிருந்து இடம்)
26 – 28 பலருக்கும் மனதுக்கு இனிமையையும் இதத்தையும் கொடுக்கும்
29 – 30 மேடைக்குப்போல் மனதுக்கும் பொருந்தும்
31 – 33 ஒதுங்கிய பக்கம் எனவும் பொருள் தரும்
33 – 36 இலக்கியப் பயன்பாட்டில் அதிகம் காற்றைக் குறிப்பது (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 25 அன்பு நம்பிக்கை போன்றவற்றுக்கு உரியவருடனும் பொருந்தக் கூடியது
02 – 20 குழந்தைக்கு எளிய முறையில் உறவுகளைப் புகட்டவும் பயன்பட்டது
15 – 33 வருவாய்க்கானதாக முன்பு நோக்கப்பட்ட இது தற்காலத்தில் சிலரால் பொழுது போக்கிற்கானதாக அமைக்கப்படுகிறது
05 – 23 மனதின் எதிர்மறை எண்ணங்கள் அற்றுப்போய் நல்லெண்ணம் தோன்ற பயன்படுவதாக கூறப்படுகிறது (குழம்பி வருகிறது)
06 – 18 இசையின் காலப்பிரமாணத்தை பேணுவதற்கானது (கீழிருந்து மேல்)
18 – 30 குறிக்கப்பட்ட நாடொன்றின் தேசியம் தொடர்பான இது மூளையின் சோர்வை மாற்றி ஞாபக சக்தியை அதிகரிக்கும்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 328

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 327ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 தத்துவம்
09 – 10 எடை
13 – 15 விரல்
19 – 23 நாகரீகம்
28 – 30 செலவு
31 – 34 மடிப்பு
35 – 36 சாரை

மேலிருந்து கீழ்

01 – 13 தவில்
25 – 31 மழை
08 – 20 கவிதை
20 – 26 கறை
10 – 16 குடை
11 – 23 பாசம்
06 – 18 அச்சு
18 – 36 அறிவுரை

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 327 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி

திருமதி. சாந்தி பாஸ்கரன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 327ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி ஜெயந்தி சதீஸ் ஜேர்மனி
திரு. திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி றஞ்சி றவி ஐக்கிய இராச்சியம்
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திரு. திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 327ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...