Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 330 (22/01/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 330ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் : 08, 27

இடமிருந்து வலம்

01 – 05 ஒரு செயலுக்கான ஆர்வமிகுதி அல்லது அதற்கான மகிழ்வுநிலை
09 – 12 மனவலி உடல்வலி இரண்டாலும் ஏற்படும்
13 – 16 இசைக்கருவிக்கானால் விலங்கிலிருந்து பெறப்படும் நாண் (குழம்பி வருகிறது)
16 – 18 வைணவ நாமத்தின் கீழே அமையும் கோடும் இவ்வாறு அழைக்கப்படுகிறது (வலமிருந்து இடம்)
19 -21 குணாதிசயங்களுடன் இதுவும் தொடர்புபடும் என்பது சிலரின் கருத்து (வலமிருந்து இடம்)
31 – 32 நிலை கொள்ளா நிலையின் வினையடி
33 – 36 ஒரு வித தயக்க உணர்வு (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 19 அளவீட்டுக்கும் அபார வளர்ச்சிக்கும் பொருந்தும்
19 – 31 விட்டுக்கொடுத்தலுக்கு எதிரானது (கீழிருந்து மேல்)
14 – 26 துறவு நிலையின் அடக்கத்திற்குரியது
16 – 34 இயற்கையின் அத்துமீறும் தன்மைக்கானது (கீழிருந்து மேல்)
23 – 35 ஒன்றின் அடுக்குடன் கூடிய தொகுப்பும் இவ்வாறு குறிப்பிடப்படும் (கீழிருந்து மேல்)
06 – 18 ஒரு விடயத்தை அணுகும் முறை (கீழிருந்து மேல்)
18 – 36 பூமிக்கடியில் இருப்பதாக புராணங்கள் கூறும் உலகம்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 330 (22.01.23)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 329ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 அரசாங்கம்
08 – 11 கறுப்பு
20 – 22 மாளிகை
26 – 28 ஊடல்
31 – 32 தீமை
33 – 34 பாடு
34 – 36 பாடம்

மேலிருந்து கீழ்

01 – 19 அந்தம்
19 – 31 தீபம்
03 – 09 சாறு
09 – 21 மாற்று
11 – 23 பண்பு
23 – 29 பழி
06 – 24 பருவம்
24 – 30 பசி

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 329 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 329ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி ஜெயந்தி சதீஸ் ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திரு. திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 329ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...