Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 329 (15/01/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 329ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் : 14, 16

இடமிருந்து வலம்

01 – 06 பொருளாதாரம் சுதந்திரம் போன்றவற்றை குறைவின்றி மக்கள் அனுபவிப்பதே இதன் வெற்றியாகும்
08 – 11 துக்கத்தைக் குறிக்கவும் பயன்படும்
20 – 22 நாட்டின் அரச தலைமைகள் வாசம் செய்வது (குழம்பி வருகிறது)
26 – 28 கருத்து வேறுபாடு காரணமாகவும் ஆரம்பிக்கும்
31 – 32 எதிர்மறை விளைவு
33 – 34 சிரமமான நிலையைக் குறிக்கும் (வலமிருந்து இடம்)
34 – 36 படிப்பினை

மேலிருந்து கீழ்

01 – 19 முடிவுக்குரியது
19 – 31 இதன் வகைகள் வழிபாட்டுத் தத்துவங்களையும் விளக்கும்(கீழிருந்து மேல்)
03 – 09 பயிர் செய்கைக்கு முன் நிலத்தை பண்படுதலையும் குறிக்கும்
09 – 21 கலப்பற்ற சுத்தத் தன்மை (கீழிருந்து மேல்)
28 – 34 இலக்கணப்படி இடத்தையும் குறிக்கும் (கீழிருந்து மேல்)
11 – 23 ஒன்றுக்கு உரித்தான இயல்பு (கீழிருந்து மேல்)
23 – 29 நீதியற்ற குற்றச்சாட்டு எனவும் பொருள் தரும்
06 – 24 உரிய காலம் என்றும் கருதலாம் (கீழிருந்து மேல்)
24 – 30 தீர்க்க முடியாததாக வறுமையில் ஏற்படும் போது கொடுமையானது

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 329

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 328ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 பாதாதிகேசம்
09 – 11 ஊற்று
15 – 16 தோகை
20 – 22 பொட்டு
26 – 28 பாடல்
29 – 30 திரை
31 – 33 ஓரம்
33 – 36 மாருதம்

மேலிருந்து கீழ்

01 – 25 பாத்திரம்
02 – 20 தாலாட்டு
15 – 33 தோட்டம்
05 – 23 ஊஞ்சல்
06 – 18 தாளம்
18 – 30 தாமரை

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 328 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி

திருமதி. பேபி கணேஷ் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 328ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி. சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி ஜெயந்தி சதீஸ் ஜேர்மனி
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. வதனா தயாளன் பிரான்ஸ்
திரு. திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி றஞ்சி றவி ஐக்கிய இராச்சியம்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திரு. திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 328ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...