Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 335 (05/03/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 335ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் எதுவும் இல்லை

இடமிருந்து வலம்

01 – 05 இறை சக்திக்கான வழி
07 – 09 மீளப்பெற வேண்டியது (வலமிருந்து இடம்)
10 – 11 உணவுண்ணும் போது இதனை பயன்படுத்துவதே சமிபாட்டுக்கு சிறப்பு என்பது முன்னோர்கள் கருத்து (வலமிருந்து இடம்)
15 – 17 ஒத்த தன்மை (வலமிருந்து இடம்)
19 – 20 குறும்புத்தனம் கொண்ட சிறியோருக்கும் இப்பெயருண்டு (வலமிருந்து இடம்)
20 – 22 சிலருக்கு சில ஒவ்வாமையை ஏற்படுத்தும்
26 – 27 மிகையாகினால் இறப்போரும் உண்டு
28 – 30 தெய்வத்தன்மை கொண்ட அமைதியின் இருப்பிடம்
31 – 35 சிலருக்கு புகழினாலும் ஏற்படும் (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 19 தெற்குத் திசைக்கு உரியது
25 – 31 நிஜம் அல்லது கற்பனை (கீழிருந்து மேல்)
14 – 32 உடலிலும் உள்ளத்திலும் அதிக வலு உணரப்படும் காலம் (குழம்பி வருகிறது)
22 – 34 அச்சுறுத்தலுக்கான விரும்பத்தகாத உணர்வு (குழம்பி வருகிறது)
05 – 17 திங்கள் எனவும் அழைக்கப்படும் (கீழிருந்து மேல்)
17 – 23 தெய்வங்களுக்கு ஏற்றவாறு மலர்களின் வகைகள் கொண்டு அமைக்கப்படும்
06 – 18 நீர் நிலைகளில், சிலவற்றின், அழகு தரும் இயற்கை அமைப்பு (குழம்பி வருகிறது)
18 – 30 தன்னைச்சார்ந்தோர் சார்ந்ததெனில் உயர்வு, தனக்கானதெனில் கீழ்மை (குழம்பி வருகிறது)
30 – 36 அளவிலா வேதனையில் அல்லது அதிர்ச்சியிலும் இந் நிலை வருவதுண்டு (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 335 (05.03.23)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 334ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 அடையாளம்
08 – 09 விதி
13 – 16 சிவப்பு
25 – 28 குற்றம்
31 – 32 பசி
33 – 36 கடிதம்

மேலிருந்து கீழ்

01 – 13 அன்பு
13 – 31 சிறப்பு
08 – 32 விருப்பம்
10 – 22 சிப்பி
05 – 17 மௌனம்
29 – 35 தலை
06 – 24 ஒற்றுமை
24 – 36 மையம்

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 334 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி. ரஜனி அன்ரன்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 334ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திருமதி. ஜெயந்தி சதீஸ் ஜேர்மனி
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி. சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. றஞ்சி றவி, ஐக்கிய இராச்சியம்
திரு. திக்கம் நடா, சுவிஸ்
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 334ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...