Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 333 (19/02/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 333ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரசதுரங்கள் – 11, 20

இடமிருந்து வலம்

01 – 05 காலகாலமாக தொடர்ந்து வருவது
07 – 09 திட்டமிட்டு தீங்கு விளைவித்தலும் இவ்வாறு குறிப்பிடப்படும் (குழம்பி வருகிறது)
14 – 17 பெற்றோரின் மரபணுக்கள் இதன் அமைப்பை நிர்ணயிக்கின்றது (குழம்பி வருகிறது)
21 – 23 அடக்கி ஆளும் தன்மைக்கும் இதனை உதாரணப்படுத்துவதுண்டு
25 – 28 சமனற்ற தாழ்வான இது விபத்துகளையும் ஏற்படுத்தும் (வலமிருந்து இடம்)
31 – 33 மனத் தாங்கலின் உச்சம்
33 – 34 குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட பாணி (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 25 சில வட்டாரப் பேச்சு வழக்கில் இராணுவத்தைக் குறிக்கும்
03 – 15 மெய்யன்பிற்கு எதிரானது (குழம்பி வருகிறது)
04 – 16 ஒன்று அல்லது மேற்பட்ட எழுத்துக்களில் பொருள் தரும்
17 – 35 உயர் பண்புகளுள் ஒன்றான இது அவற்றுக்கான அங்கீகாரமாகவும் நோக்கப்படும்
06 – 18 எத்துணை நாகரீக வளர்ச்சியின் மாற்றத்திலும் மரபு ரீதியாக நாம் தக்க வைத்துக் கொண்டது (கீழிருந்து மேல்)
18 – 36 பழந்தமிழர், தெய்வ வழிபாட்டுக்கு நிகரானதென இதனையும் வணங்கினர் (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 333(19.02.23)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 332ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 மந்திரம்
08 – 11 மல்லிகை
13 – 15 பகல்
22 – 24 கோலம்
25 – 29 சங்கீதம்
32 – 34 வனம்

மேலிருந்து கீழ்

01 – 25 மங்கலம்
14 – 32 பந்தம்
10 – 16 ஒலி
11 – 29 சலங்கை
12 – 24 மாயம்
24 – 36 வீரம்

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 332 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. றஞ்சி றவி, ஐக்கிய இராச்சியம்

திருமதி. றஞ்சி றவி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 332ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. றஞ்சி றவி, ஐக்கிய இராச்சியம்
திருமதி. ஜெயந்தி சதீஸ் ஜேர்மனி
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திரு. திக்கம் நடா, சுவிஸ்
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி. சந்திரா கோபால் ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 332ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...