Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 340 (09/04/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 340ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் எதுவும் இல்லை

இடமிருந்து வலம்

01 – 04 தீங்கு அல்லது இழப்புகள் நேரக்கூடிய சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு
04 – 06 தட்ப வெப்ப மாற்றங்களைக் கொண்டும் பிரிக்கப்படும் (வலமிருந்து இடம்)
08 – 11 ஓசைக்கேற்ற நயம் (வலமிருந்து இடம்)
13 – 17 தெளிவற்ற மனநிலை
21 – 23 பயிர்கள் விளைவிப்பதற்கு ஏற்றதல்லாததாக கருதப்படுவது (வலமிருந்து இடம்)
25 – 28 பயன் நோக்காது வழங்கும் பண்பு
32 – 34 முத்தெருக்களின் சந்திப்பையும் குறிக்கும் (வலமிருந்து இடம்)
34 – 36 வழி காட்டும் குறியாகவும் அமைவது

மேலிருந்து கீழ்

01 – 19 முழுமையின் அல்லது ஒரு அமைப்பின் பகுதி
19 – 31 மனதை ஒருமுகப்படுத்தும் தியான முறை (கீழிருந்து மேல்)
08 – 20 புள்ளிகளின் விரிவாக்கம் என்றும் கூற முடியும் (கீழிருந்து மேல்)
23 – 35 பசுமைக்கான பெரும் பங்கு
06 – 12 சமநிலையை பேணுவது
18 – 36 கட்புலனற்றோரின் திசை காட்டி

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 340 (09.04.23)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 339ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 எண்ணம்
07 – 08 ஆடை
08 – 10 ஆயுள்
13 – 16 கணக்கு
16 – 18 விறகு
19 – 21 காற்று
29 – 30 மழை
33 – 35 முகில்

மேலிருந்து கீழ்

01 – 07 எடை
13 – 31 கறுப்பு
21 – 27 கால்
16 – 34 கிழக்கு
05 – 23 மாற்றம்
12 – 24 கவிதை
30 – 36 மண்

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 339ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி. ஜெயந்தி சதீஸ் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 339ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி இராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திரு. திக்கம் நடா, சுவிஸ்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திரு திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி. சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி. சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திரு. கனகசுந்தரம், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 339ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...