Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 332 (05/02/2023)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள். அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரங்களை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடல்களிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 332ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் : 06, 21, 31, 35

இடமிருந்து வலம்

01 – 05 வேதநூல்களில் உள்ள செய்யுள் எனவும் கூறலாம்
08 – 11 பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசியத்துடன் தொடர்புடையது
13 – 15 சூர்யோதயம் முதல் அஸ்தமனம் வரைக்கும் (குழம்பி வருகிறது)
22 – 24 அலங்கார வடிவம்
25 – 29 ஞானம் அவசியம் (வலமிருந்து இடம்)
32 – 34 பூமித்தாயின் நுரையீரல் என வர்ணிக்கப்படுவது (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 25 மனைமாட்சி என குறளில் குறிப்பிடப்படுவது
14 – 32 ஒளியேற்றும் பொருளாக முன்னோர்களால் செய்யப்பட்டது
10 – 16 ஐம்புலன்களுள் ஒன்றினால் உணரக்கூடியது (கீழிருந்து மேல்)
11 – 29 புனிதமான பரதத்தில் நிகழ்த்தப்படும் பூஜை (கீழிருந்து மேல்)
12 – 24 உண்மை என நம்பமுடியாத அசாதாரணத் தன்மைகளை கொண்டது
24 – 36 பண்டைத் தமிழர் போர் மரபு சொல்லும் நூல்களில் அதிகம் புலப்படுவது (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 332

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 331ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 சந்தேகம்
08 – 10 ஒயில்
20 – 22 முல்லை
22 – 23 கலை
31 – 32 மொய்
33 – 36 குருத்து

மேலிருந்து கீழ்

01 – 25 சம்பவம்
26 – 32 மொழி
03 – 15 தேயிலை
15 – 27 எல்லை
10 – 16 நூல்
28 – 34 மது
05 – 17 வேதம்
17 – 29 வேகம்
06 – 18 வயது
18 – 36 வழக்கு

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 331ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. மேரி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி ஜெயந்தி சதீஸ் ஜேர்மனி
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. வதனா தயாளன், பிரான்ஸ்
திருமதி. றஞ்சி றவி, ஐக்கிய இராச்சியம்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திரு. திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 331ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...