Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 255 (08/03/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 255 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 31

இடமிருந்து வலம்

01 – 05 அறிகுறி அல்லது குறியீடு
08 – 10 இதனை அடிப்படையாக கொண்டுதான் தேவைகள் அமைய வேண்டும் என்பர் (குழம்பி வருகிறது)
10 – 12 பிணைப்பிற்குரிய கயிறு எனவும் கூறலாம் (குழம்பி வருகிறது) ஒலிபரப்பாகும் பாடலில் நேரடியாக சொல் வரவில்லை.இச் சொல்லுடன் இணைந்து வரக்கூடிய சொல் வருகிறது.
14 – 16 கொடுப்பது இலகு.பெறுவது கடினம் (வலமிருந்து இடம்)
21 – 23 சாகுபடியற்ற நிலைக்குரியது (வலமிருந்து இடம்)
25 – 26 தனியானால் பேறு. மை இணையும் போது தொலை தூரம் என அர்த்தப்படும்.
35 – 36 விவசாய உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பது.

மேலிருந்து கீழ்

01 – 19 இலக்கியத்திலும் இடம் பிடித்த பேச்சு முறை
14 – 32 ஒன்றைப் பெறுவதற்கான உகந்த நிலை (கீழிருந்து மேல்)
21 – 33 மிகுதியாக மக்களிடம் இருக்கும் வழக்கு (கீழிருந்து மேல்)
28 – 34 உறுப்புகளின் செயற்பாடுகளுக்காக உடலுக்குள்ளும் உண்டு
05 – 35 மென்மையான புன்முறுவல் (கீழிருந்து மேல்)
06 – 24 விடைக்கான விபரங்களை தன்னகத்தே கொண்டது
30 – 36 பழந்தமிழர் காதணி வகைகளுள் ஒன்று

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 254 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 கொசுவம்
04 – 06 யோகம்
07 – 08 தோள்
09 – 12 களைப்பு
19 – 23 தங்குதடை
27 – 29 பறவை
31 – 32 கலை
32 – 35 கழுத்து

மேலிருந்து கீழ்

01 – 13 கொள்ளை
14 – 32 திங்கள்
03 – 09 வளை
04 – 28 பதக்கம்
17 – 23 ஜாடை
12 – 36 வரவேற்பு

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 254ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா , பிரான்ஸ்
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 254 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...