40வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி. தர்சிகா விஜயராஜ் (மயு) (18/06/2026)
பிரான்சில் வசிக்கும் திருமதி. தர்சிகா விஜயராஜ் (மயு) அவர்கள், தனது 40வது பிறந்த நாளை இன்று தனது இல்லத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார்.
இன்று பிறந்த நாள் காணும் திருமதி தர்சிகா விஜயராஜ் (மயு) அவர்களை அன்புக் கணவர் திரு. விஜயராஜ், அன்புப் பிள்ளைகள் மவிஷ், யுதிஷ், அன்பு அப்பா சுப்பிரமணியம், அன்பு அம்மா மனோகரி, அன்புத் தம்பிமார் சகிர்தன், விஜிர்தன், அன்பு மச்சாள்மார் பிரியா, சங்கீதா, ஜெகன் குடும்பம் (பிரான்ஸ்), சுரேன் குடும்பம் (அவுஸ்திரேலியா), சேகர் மாமா குடும்பம், மோகன் மாமா குடும்பம், யோகச்சந்திரன் சித்தப்பா குடும்பம் (பிரான்ஸ்), நாகேஸ்வரன் குடும்பம் (லண்டன்), மனோ – ஜெயந்தி குடும்பம் (லண்டன்), சிங்கராஜா குடும்பம் (கனடா) மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இறைவனின் அருளாலும், குடும்பத்தின் அன்பாலும், வாழ்வின் எல்லா வளங்களும் செல்வங்களும் பெற்று, நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும், குடும்ப மகிழ்ச்சிகள் பெருகி, பல்லாண்டு காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து, மேலும் மேலும் உயர்வுகளையும் வெற்றிகளையும் அடைந்து, சந்தோஷம் நிறைந்த வாழ்க்கையை வாழ இறைவனை பிரார்த்தித்து மனமார வாழ்த்துகின்றனர்.
இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி தர்சிகா விஜயராஜ் அவர்களுக்கு TRT தமிழ் ஒலி குடும்பத்தினரும் தங்களது இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, எல்லா வளங்களும் நலன்களும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறோம்
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் அனுசரணை கொடுத்து வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அப்பா, அம்மா திரு. திருமதி. சுப்பிரமணியம் மனோகரி தம்பதியினர்.
அவர்களுக்கு TRT தமிழ் ஒலி குடும்பத்தின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

