Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 254 (01/03/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 254 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 15, 25

இடமிருந்து வலம்

01 – 04 பருமனின் அடிப்படையில் கூடிக்குறையும்
04 – 06 மனத்தினை ஒரு நிலைப்படுத்தி செய்கின்ற தியானம் எனவும் பொருள் தரும் (வலமிருந்து இடம்)
07 – 08 இராமாயணத்தில் இராமரின் அழகினை வர்ணித்த போது இதன் பொருள் கண்களைக் குறிப்பதாகவும் கருத்து கருத்து உண்டு (வலமிருந்து இடம்)
09 – 12 பலம் இழந்த நிலை (குழம்பி வருகிறது)
19 – 23 தடுமாற்றம் அல்லது இடர்ப்பாடு
27 – 29 அலைபேசியின் நுண்ணலைகளால் அழிந்து வருகின்றது (குழம்பி வருகிறது)
31 – 32 அதீத பக்திப் பரவசத்தின் விளைவாக நோக்கப்படுவது (வலமிருந்து இடம்)
32 – 35 உடல் எடையானது முதலில் பிரதிபலிக்கும் பகுதியெனப்படுவது

மேலிருந்து கீழ்

01 – 13 உலகெங்கும் பரவும் நோய் எனும் போது இப்பெயரால் அழைக்கப்படும்.
14 – 32 சந்திரனை அடிப்டையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு உருவாகியதால் இப்பெயரால் அழைக்கப்படும் (குழம்பி வருகிறது)
03 – 09 உத்தரம் எனப்படும்
04 – 28 தரத்திற்கேற்றவாறு தன்மை மாறுபடும் (கீழிருந்து மேல்)
17 – 23 சாயல் அல்லது சைகை
12 – 36 தமிழ் மரபுடன் பின்னிப்பிணைந்ததான இது மனிதர்க்கு மட்டுமல்ல புதியவற்றுக்கும் பொருந்தும் (கீழிருந்து மேல்)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 253 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 பருவம்
05 – 06 ஏது
07 – 11 வசந்தம்
19 – 21 வைரம்
23 – 24 அறை
31 – 34 முத்திரை

மேலிருந்து கீழ்

01 – 13 பவனி
08 – 26 இரசம்
09 – 27 பந்தம் (பிடித்தல்)
04 – 34 முகூர்த்தம்
23 – 29 மறை
29 – 35 மடி
06 – 18 வயது
24 – 36 அனல்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 253ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா , பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 253 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...