Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 239 (27/10/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 239ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 25, 36

இடமிருந்து வலம்

01 – 06 இக்கட்டான சூழ்நிலையில் ஏற்படும்
08 – 11 மீதியுடன் இணையக்கூடிய பாதி
14 – 16 உரியதை சுட்டிக்காட்டும் குறியீட்டுடன் பொருந்தி வரக்கூடியது (குழம்பி வருகிறது)
19 – 20 இதன் மூலம் நம் முன்னோர்கள் நோய்களை கணித்தனர் (வலமிருந்து இடம்)
28 – 30 எதிராகவும் சார்பாகவும் அமையக்கூடிய அமையக் கூடிய அணியைக் கொண்ட அமைப்பு
31 – 35 கலையழகு கொண்ட இது சிலருக்கு கை வந்த கலை (குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 19 கெடுதல் ஏற்படுத்துவதாக கருதப்படும் பிறர் சார்ந்தது
20 – 32 எதிர் கொள்ள முடியாமல் பின்வாங்கும் உணர்வுகளுள் ஒன்று
15 – 33 ஒன்றை இயங்க செய்ய அல்லது உள் நுழைய
பயன்படும் (கீழிருந்து மேல் )
16 – 34 மொழி இன மதபேதம் என எல்லையின்றி அமையக்கூடியது (குழம்பி வருகிறது)
17 – 29 அதிக உற்பத்தியை கொண்ட நாடு சீனா
(குழம்பி வருகிறது)
06 – 24 விரும்பத்தகாத குணங்களை கொண்டவர்களை அல்லது விசித்திரமானவர்களை இவ்வாறு குறிப்பிடுவதுண்டு (கீழிருந்து மேல்)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 238 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 பட்டியல்
10 – 12 கனவு
13 – 16 காந்தம்
25 – 29 சத்தியம்
31 – 33 வாரம்
33 – 36 வானவில்

மேலிருந்து கீழ்

01 – 25 பலகாரம்
08 – 32 தந்திரம்
09 – 27 இதயம்
16 – 28 சமம்
05 – 23 பின்னல்
12 – 24 முடிவு

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 238 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
ஜெயந்தி ஜேர்மனி
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன் , ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா
திருமதி.சித்திரா பவன் நோர்வே
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன்
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 238 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...