Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 233 (08/09/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 233 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 06, 07, 11

இடமிருந்து வலம்

01 – 05 சமவெளி நாகரீகங்கள் உருவாக நதிகளின் சிறப்பம்சமான இதுவும் காரணம்
08 – 10 வெளிவரும் போது ஓட்டுப்பகுதியைக் கொண்டிருக்காத இது 5 ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும்.
13 – 17 ஒவ்வொரு சமூகத்திற்கும் வெவ்வேறு விதமான விதிகளையும் நெறி முறைகளையும் கொண்டது.(குழம்பி வருகிறது)
19 – 22 குறிப்பிட்ட நிறமெதுவும் இல்லாத போதும் இருப்பதாக நம்பப்படுவது
26 – 30 பரதத்திலும் பத்து வகையான இதற்கு தனித்தனி முத்திரைகள் உண்டு (குழம்பி வருகிறது)
35 – 36 அடிப்படை உணர்வுகளுள் ஒன்றான இது நாவில் மட்டும் பிறப்பதில்லை என கண்டறியப்பட்டுள்ளது

மேலிருந்து கீழ்

13 – 31 பண்டைத்தமிழ் இலக்கியங்களில் கோட்டம் என அழைக்கப்பட்டது (குழம்பி வருகிறது)
02 – 32 இன்பம் அல்லது அகம் எனப்படும் இது நடிப்புத்திறமையை வெளிப்படுத்த உதவுவதாக கருதப்படுகிறது.
27 – 33 சக்தி ஊடு கடத்தப்படும் ஒரு வகை நுட்பம்
10 – 34 எழுத்துக்கள் பிறப்பதற்கு மூல காரணமாகும் ஒலி (குழம்பி வருகிறது)
17 – 23 இவற்றின் நீரோட்டம் புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. (கீழிருந்து மேல்)
12 – 30 சில நாடுகளின் வலிகள் நிறைந்த வரலாற்றில் இடம் பிடிப்பது

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 232 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 அசகாயம்
07 – 09 சிந்து
14 – 16 சொட்டு
27 – 30 தோட்டம்
31 – 35 மந்திரம்

மேலிருந்து கீழ்

01 – 19 அந்தம்
19 – 31 மதம்
20 – 32 வசம்
09 – 21 சாட்சி
10 – 28 தாலாட்டு
05 – 23 பயணம்
06 – 18 இதம்
18 – 36 வட்டம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 232ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி.பிரேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா
திருமதி.சாந்தி பாஸ்கரன் , ஜேர்மனி
திரு.கனகசுந்தரம் யேர்மனி
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திரு.திக்கம் நடா சுவிஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 232 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...