Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 319 (24/04/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 319ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் –08, 26

இடமிருந்து வலம்

01 – 04 சமூக ஒற்றுமையை வளர்ப்பதிலும் பங்காற்றுகிறது
05 – 06 உருவத்தையோ செயலையோ மாதிரியாகக் கொண்டு அமைவதுண்டு
11 – 12 உலகளாவிய பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக உள்ளது
13 – 14 செல்வ நிலையை மதிப்பிட இதுவும் உதவும் (வலமிருந்து இடம்)
31 – 33 அநேகமாக இறைவனைப் பற்றியதான இதில் சங்கதிகள் இருக்காது (குழம்பி வருகிறது)
34 – 36 சித்த மருத்துவத்திற்கு அதிகம் பயன்படும்

மேலிருந்து கீழ்

01 – 13 சாதகமான விளைவு
19 – 31 புனிதமாகக் கருதப்படும் புராதன நூல் (குழம்பி வருகிறது)
14 – 20 திரித்துக் கூறப்படுவதும் இதற்குள் அடங்கும்
09 – 33 பரிச்சயம்
04 – 16 இருபத்து நான்கு நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு (கீழிருந்து மேல்)
16 – 28 வளைந்து கொடுக்கும் தன்மைக்கானது
17 – 35 அளவை மீறினால் ஆபத்தை ஏற்படுத்தும் (கீழிருந்து மேல்)

06 – 18 திருமாலுக்குரியது (கீழிருந்து மேல்)
18 – 36 ஒருவரது படைப்பில் காணப்படும் தனித்துவத்தின் அடையாளம்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி 319

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 318 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி

திருமதி சந்திரா கோபால் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 318ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 தட்டுப்பாடு
08 – 10 ஆட்சி
10 – 11 ஆடை
22 – 24 முத்து
27 – 30 விருந்து
31 – 34 இராகம்

மேலிருந்து கீழ்

01 – 19 தண்ணீர்
25 – 31 இலை
14 – 20 பாவை
03 – 27 விளையாட்டு
17 – 35 முந்தானை
06 – 18 மொட்டு
24 – 36 கூத்து

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 318 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு கனகசுந்தரம் ஜேர்மனி
திருமதி சித்ரா பவன் நோர்வே
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திரு திக்கம் நடா சுவிஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திருமதி.தேவி தனராஜ் பிரான்ஸ்
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. அருணா விக்கினேஸ்வரன் நெதர்லாந்து
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 318ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...