Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 316 (27/03/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 316 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 08

இடமிருந்து வலம்

01 – 06 பெருவடிவம் எனவும் பொருள் தரும்
10 – 12 இந்திய சீன அதிகாரப்போட்டிக்கு இலங்கை இவ்வாறாக அமைகிறது என்பது அரசியல் அவதானிகள் கருத்து (குழம்பி வருகிறது)
14 – 17 அசுத்தத்தை கொண்டு செல்லக் கூடியது (குழம்பி வருகிறது)
21 – 23 ஒழுங்கு படுத்தும் விதம் மற்றும் வடிவமைப்பு வகை போன்றவற்றை சார்ந்த கலை
25 – 30 அடிமைத்தனத்திற்கு எதிரானது (குழம்பி வருகிறது)
31 – 32 சில போராட்ட வரலாறுகள் தியாகம் நிறைந்தவை எனினும் இவ்வாறான காலகட்டமும் இருக்கவே செய்கிறது
33 – 36 சேதத்தை ஏற்படுத்துமெனினும் தற்காப்பிற்கும் சிலர் இதனை நாடுவதுண்டு

மேலிருந்து கீழ்

01 -19 உயிர்கொல்லி நோய்களுக்கான மருந்து தயாரிப்பின் இறுதியில் அதன் வெற்றியை தீர்மானிக்க முதலில் சோதனைக்குள்ளாவது
14 – 26 தொல்லியல் துறையின் ஆய்விலும் பயன்படுத்தப்படும் இது சில தோஷ நிவர்த்திக்குமானது (குழம்பி வருகிறது)
03 – 21 பருவ காலங்களின் அடிப்படையில் செய்யப்படும் (குழம்பி வருகிறது)
05 – 17 அதியுச்ச கோபங்களின் வெளிப்பாடு (குழம்பி வருகிறது)
06 – 24 இதன் உருவாக்கத்தில் முதலிலே தோற்றம் பெற்றது ஒளி என்னும் கருத்து உண்டு (கீழிருந்து மேல்)
24 – 36 சிலவற்றின் வளர்ச்சிக்கு இன்றியமையாத இது அளவுக்கதிகமானாலும் பாதிப்பை ஏற்படுத்தும்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி 316 (27.03.22)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 315 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 315ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 மக்களாட்சி
08 – 11 கழுத்து
13 – 15 அந்தி
25 – 27 மரம்
31 – 34 அன்னம்

மேலிருந்து கீழ்

01 – 25 மந்திரம்
08 – 26 மருந்து
16 – 34 நாடகம்
11 – 23 கதிர்
23 – 35 மலர்
06 – 30 கண்காட்சி
30 – 36 கதை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 315ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு திக்கம் நடா சுவிஸ்
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திருமதி சித்ரா பவன் நோர்வே

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 315ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...