Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 292 (16/05/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 292 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள்  11, 29

இடமிருந்து வலம்

01 – 05 உரிமை மறுக்கும் பெரும்பான்மை உலக நாடுகளுக்கு உரைப்பது

07 – 10 தாக்கலாம் தற்காக்கலாம் (வலமிருந்து இடம்)

14 – 17 தமிழினத்தின் கனவுக்கான விடியல் (வலமிருந்து இடம்)

20 – 23 உயரத்துக்கான பிரயத்தனம்

27 – 28 உதரத்தின் உணர்வு

31 – 32 அகத்துக்கும் புறத்துக்குமான கனம்

33 – 35 சிரம் தாழ்த்தாது – இது தமிழுக்கான முகவரி (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 19 பற்றினால் அலையும் மெய் பற்றினால் கிடைக்கும் மீதி

19 – 31 சேதாரம் தரும் மாருதம் (கீழிருந்து மேல்)

08 – 26 மன்னராட்சியில் முன்னரும் பின்னருமான உரித்து

21 – 33 இறந்த காலத்துக்கானதல்ல வருங்காலத்துக்கானதாகவே அமையும் (குழம்பி வருகிறது)

06 – 18 நடையுடன் சேரும் போது நடைமுறையில் ஒட்டாது வாழ்வது

18 – 36 ஊகத்தின் அடிப்படையிலான வியூகத்தின் வடிவம் (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 292 (16.05.21)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 291 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 291ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 மகத்துவம்

14 – 17 பரதம்

20 – 23 சிந்தனை

25 – 27 பாதம்

31 – 32 இடை

33 – 36 சிவப்பு

மேலிருந்து கீழ்

01 – 25 மயக்கம்

02 – 20 கற்பனை

20 – 26 பானை

26 – 32 பாடை

04 – 28 அந்தஸ்து

11 – 23 மாதம்

06 – 18 வாதம்

18 – 36 புனிதம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 291 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி

திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்

திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்

திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்

திருமதி.சித்ரா பவன், நோர்வே

திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்

திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்

திரு.திக்கம் நடா, சுவிஸ்

திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி

திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி

திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி

திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி

திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி

திருமதி ராஜி சந்திரசேகரம் நோர்வே

திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

திருமதி சுகந்தினி மகாமேனன், ஐக்கிய இராச்சியம்

அன்பான நேயர்களே, உங்கள் விடைகளுடன் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 291 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...