Main Menu

செவிலியர் தினத்திற்கான சிறப்புக்கவி ( 12/05/2021)

புனிதப்பணி செய்த
புளோரன்ஸ் நைற்றிங்கேல் அம்மையாரின்
பிறந்தநாளான வைகாசித் திங்கள் பன்னிரெண்டே
ஐ.நா.சபையின் பரிந்துரைப்பில்
உலக சுகாதார நிறுவனத்தின் பிரகாரம்
உலக செவிலியர் தினமாச்சு !

கருணையின் ஊற்றுக்கள்
காருண்ணிய சீலர்கள் செவிலியர்கள்
கொடிய கொரோனா காலத்திலும்
கவச உடைக்குள்ளும்
வியர்வைக் குளியலோடு
இரவு பகல் பாராது
இடைவிடாது சேவை செய்து
உயிர்களைக் காக்கும் செவிலியரே
உம் தூய பணியைப் போற்றுகின்றோம் !

வெள்ளை ஆடைக்குள்
தேவதையாக வலம் வரும் செவிலியரே
உங்கள் வேதனைகள்
எமக்கு புரிகிறது
கடமைக்குள் உமை அர்ப்பணிக்கும்
தூய பணியாளர்களே போற்றுகிறோம் உம்மை !

மக்கள் உயிர்காக்கும் செவிலியரே
மனிதநேயப் பணியாளர்களே
எம்முயிர் காக்க
உம்முயிர்களைப் பணயம் வைத்து
உன்னத சேவை செய்யும் செவிலியரே
உமைப் போற்றுகின்றோம் !

கொரோனாப் பரவலின்
உச்சத்திலும் கூட
அச்சமின்றிப் பணி செய்து
உயிர் காக்கும் செவிலியரே
உமைப் போற்றுகின்றோம் நாம் !

அன்னை அணைக்க முன்னே
எமை முதலில் அணைத்திட்ட செவிலித்தாய்களே
உயிர் காக்கும் உன்னத பணியை
இக்கட்டான கொரோனா காலத்திலும்
விடுப்பின்றி தொடர்ந்து பணியாற்றும் செவிலியரே
உம்பணிக்கு ஈடு இணை ஏதுமில்லையே
செவிலியர் தினமான இன்று மட்டுமல்ல
என்றும் உமைப் போற்றுகின்றோம்
உம் பணிக்கு நன்றி நன்றி !

பகிரவும்...