5வது பிறந்த நாள் வாழ்த்து – சஹாரா ஆதீசன் (31/10/2026)
நோர்வே Oslo வில் வசிக்கும் ஆதீசன் -யசோதா தம்பதிகளின் செல்வப்புதல்வி சஹாரா 29ம் திகதி அக்டோபர் மாதம் வந்த தனது 5 வது பிறந்த நாளை 31ம் திகதி அக்டோபர் மாதம் சனிக்கிழமை இன்று தனது அண்ணா அர்ஜுன் உடன் இணைந்து கொண்டாடி மகிழ்கின்றார்.
இன்று 5வது பிறந்த நாளை கொண்டாடும் சஹாரா செல்லத்தை, அன்பு அப்பா ஆதீசன், அன்பு அம்மா யசோதா, அன்பு அண்ணா அர்ஜுன் , அப்பப்பா பவன், அப்பம்மா சித்திரா, நிலானி அத்தை , அம்மம்மா அருந்தவமலர், தாயகத்தில் வசிக்கும் அப்பம்மாமார் , சித்தப்பா , அத்தைமார், மாமாமார், மச்சாள்மார், மற்றும் பிரான்ஸ் பாரிஸ் இல் வசிக்கும் தாத்தாமார், பாட்டிமார், மாமாமார், சித்திமார் பிரான்ஸ் Toulouse இல் வசிக்கும் தாத்தாமார், பாட்டிமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், மற்றும் நோர்வேயில் வசிக்கும் பெரியம்மாமார், பெரியப்பாமார், அண்ணாமார், அக்காமார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் நோர்வே ஶ்ரீ துர்க்கை அம்மன், டென்மார்க் பிரண்டாபதி அபிராமி அம்மன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்றும் பிள்ளையாக வாழ வாழ்த்துகின்றார்கள்.
இன்று 5வது பிறந்த நாளை கொண்டாடும் சஹாரா செல்லத்தை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து பல்லாண்டு காலம் சிறப்புற வாழ வாழ்த்தி மகிழ்கிறோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அப்பப்பா அப்பம்மா பவன் சித்திரா குடும்பத்தினர்.
அவர்களுக்கு எமது நன்றி!


