Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 285 (28/03/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 285 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 10, 15, 31, 36

இடமிருந்து வலம்

01 – 06 போரின் கொடூரத்தை உணர்த்தி உலகின் கவனத்தை ஈர்த்தவையும் உண்டு
07 – 09 பகுத்தறிந்து அறியக்கூடியது எனவும் கூறலாம் (குழம்பி வருகிறது)
11 – 12 கதைக்கான மையம் (வலமிருந்து இடம்)
16 – 18 உடலின் பாதிப்புக்களை கண்டறிய உதவுபவற்றுள் ஒன்று (குழம்பி வருகிறது)
20 – 22 மழைச்சிதறல் (குழம்பி வருகிறது)
32 – 33 தமிழ் வரலாற்றின் படி பெருந்தொகையைக் குறித்த இதன் பொருள் பொடியாக நொறுங்கியது என்பதிலிருந்து தோற்றம் பெற்றது
33 – 35 வலிமைக்கான விளையாட்டுகளுள் ஒன்றுக்கான முதன்மையானது (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 25 செய்வினைப்பயன் மூலம் காக்கக் கூடியது
08 – 26 சுழற்சி சீரின்மையானால் பாதிப்புக்களை ஏற்படுத்தும்
21 – 27 விதிகளுடன் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடக்கப்பட்டது
22 – 34 உறுதிப்படுத்தப்பட்ட உரிமை (குழம்பி வருகிறது)
17 – 35 முடக்கப்படுபவற்றுள் இதுவும் அடங்கும் (கீழிருந்து மேல்)
06 – 30 தற்கால சூழ்நிலையில் பொது இடங்களில் சாத்தியமற்ற தன்மை

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 285 (28.03.2021)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 284 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்

திருமதி.தேவி தனராஜ்   அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 284 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 நதிக்கரை
08 – 10 கடல்
16 – 18 தவறு
27 – 28 நிசி
31 – 32 சேய்
33 – 36 வெட்கம்

மேலிருந்து கீழ்

01 – 07 நரை
13 – 31 செவ்வாய்
02 – 08 கதி
08 – 26 கண்ணீர்
09 – 21 பாடம்
22 – 34 காட்சி
11 – 23 பேதம்
23 – 35 முகம்
06 – 18 காற்று
24 – 36 பாவம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 284 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ஜேர்மனி
திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.பிலோமினா யோகினி அன்ரன், பிரான்ஸ்
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி.ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்

அன்பான நேயர்களே, உங்கள் விடைகளுடன் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்!

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 284 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...