Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 276 (10/01/2021)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 276ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் :31

இடமிருந்து வலம்

01 – 06 யாழிசைக்கு வசப்பட்டவர்களின் திருமண முறையான இதனை தமிழர்கள் அன்று வழக்கமாக கொண்டிருந்தார்கள்
07 – 09 வெளியீட்டுக்கும் உரியது (குழம்பி வருகிறது)
09 – 12 இலக்கியத்தில் முல்லை என சுட்டப்படுகின்றது
14 – 16 நிலையற்றவற்றுள் இதுவும் ஒன்று
21 – 23 குழந்தைப் பருவத்திற்குமானது (குழம்பி வருகிறது)
25 – 27 தற்போது பல வடிவங்களில் இருந்தாலும் வட்ட வடிவம் மட்டுமே இப்பெயருக்குரியது
33 – 36 வாய் மொழி மட்டுமல்ல உடல் மொழியும் உதவுகின்றது (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 19 மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை இவை கொண்டிருந்தன
08 – 20 நடுநிலைமைக்கு எதிரானது (குழம்பி வருகிறது)
20 – 32 ஆதாரம்
16 – 28 இனிமை என பொருள் தரும் இது மொழியியல் இசை நாடகம் என்பவற்றையும் உள்ளடக்கும் (குழம்பி வருகிறது)
11 – 17 தொழில் நுட்பத்தால் மாற்றமடைந்து வரும் இது முற்காலத்தில் பயனுள்ள தாவரங்கள் மூலம் அமைக்கப்பட்டன (கீழிருந்து மேல்)
23 – 29 சிற்றிலக்கிய தூது நூல்களுள் ஒன்றில் முக்கியத்துவம் பெற்றது (கீழிருந்து மேல்)
12 – 36 நேர்மறையான இது துரோகத்துடன் இணையும் போது மதிப்பிழந்து நிற்கும் (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 276

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 275 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி , ஜேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 275 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 அஞ்ஞானம்
07 – 10 கண்ணீர்
14 – 17 தாலாட்டு
16 – 18 கட்டு
20 – 21 ஆசி
25 – 27 ஓரம்
32 – 35 துருவம்

மேலிருந்து கீழ்

01 – 25 அர்த்தம்
14 – 32 ஆதாரம்
28 – 34 துளி
11 – 23 பாட்டு
06 – 18 கடல்
18 – 36 கண்ணாடி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 275 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.லாலா ரவி பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.யோகினி அன்ரன், பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 275ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...