Day: January 10, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 276 (10/01/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
மர்செய் நகருக்கு பரவிய பிரித்தானிய வைரஸ்! –
இதுவரை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட பிரித்தானியாவின் புதிய கொரோனா வைரஸ், தற்போது கைமீறிச் சென்றுள்ளது. Bouches-du-Rhône நகரில் அடையாளம் காணப்பட்ட இந்த புதிய வைரஸ் பின்னர் இல் து பிரான்சுக்குள் கண்டறியப்பட்டது. இல் து பிரான்சுக்குள் பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கு இந்தமேலும் படிக்க...
பாகிஸ்தான் முழுவதும் பெரும் மின்தடை!
பாகிஸ்தானில் நாடு முழுவதும் பெரும் மின்தடையைத் தொடர்ந்து சில பகுதிகளில் மின்சாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவில் இருந்து திடீரென இருளில் மூழ்கின. அத்தோடு மின்சாரம் முழுமையாக மீட்டமைக்க பல மணிநேரம் ஆகலாம்மேலும் படிக்க...
ஸ்பெயினில் பிலோமினா புயல்: நால்வர் மரணம்
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டைத் தாக்கிய பிலோமினா புயல் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாட்டின் தென் பகுதியில் ஆற்றுநீர் பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில், கார் மூழ்கி ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய பகுதிகளில் வீடற்ற இருவர்மேலும் படிக்க...
கனடாவில் முதல் தடவையாக இன்றுமுதல் மாகாண அளவில் ஊரடங்கு- மீறுவோருக்கு கடும் அபராதம்!
கனடாவில் முதல் தடவையாக மாகாண அளவில் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அந்நாட்டு நேரப்படி இன்று இரவு முதல் நடைமுறைக்கு வருகிறது, கியூபெக் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவலின் அதிகரிப்பை அடுத்து இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது. கியூபெக்கில் இதுவரை இரண்டு இலட்சத்துமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் பலத்த மழை – நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு !
இந்தோனேசியாவில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மீட்பு பணியகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஜகார்த்தாவின் தென்கிழக்கில் உள்ள மேற்கு ஜாவாவின் சிஹான்ஜுவாங் கிராமத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இந்திய உயர்சிறப்பு கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளிலும் வளாகங்களை ஆரம்பிக்கலாம் – பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி
இந்திய உயர் சிறப்பு கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டிலும் வளாகங்களை ஆரம்பிக்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தரம்வாய்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழங்கள் இந்தியாவில் வளாகங்கள் அமைப்பது போன்று, சிறப்பு அந்தஸ்து பெற்ற இந்திய கல்வி நிறுவனங்கள்,மேலும் படிக்க...
அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்- ஓ.பன்னீர்செல்வம்
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனாவை விட மோசமான அரசியல் வைரசாகமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப் பட்டமைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும்- அனந்தி
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகமேலும் படிக்க...
வடக்கு- கிழக்கிலுள்ள மக்களை ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு சாணக்கியன் அழைப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு வடக்கு- கிழக்கிலுள்ள அனைத்து மக்களையும் ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை, விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு மேலும் படிக்க...
4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப் பட்டவர்களின் நினைவுதினம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47ஆவது நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. யாழ். முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாகமேலும் படிக்க...