Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 273 (04/10/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 273ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள்  – 06, 29, 32

இடமிருந்து வலம்

01 – 05 உணர்ச்சி மிகுதிகளுள் ஒன்று
09 – 12 மனங்களுக்கேற்றவாறு மாறுபடும் (குழம்பி வருகிறது)
13 – 15 சீர் எனினும், சீரற்றதாக தென்படும் போதும் இச்சொல் பயன்படும் (குழம்பி வருகிறது)
15 – 16 புலம்பெயர் நாடுகளில் பலருக்கும் மகிழ்வைக் கொடுப்பதான இது தற்கால சூழ்நிலையில் ஏமாற்றத்தைக் கொடுத்தது
16 – 17 தமிழ் வளர்த்த சங்கங்களுள் மதுரைக்கானது (வலமிருந்து இடம்)
21 – 23 நம் வாழ்வாதாரங்களுள் ஒன்று (வலமிருந்து இடம்)
26 – 28 பெற்றோர், குழந்தைகளை அவதானமாக கையாள வேண்டிய அவர்களின் காலப்பகுதி (வலமிருந்து இடம்)
34 – 36 இணக்கமின்மையின் விளைவு

மேலிருந்து கீழ்

01 – 19 பயிர்களை பறவைகளிடமிருந்து பாதுகாக்க பயன்படுவது
19 – 31 இலக்கணத்தின் படி வினையை அடியாகக் கொண்டது (கீழிருந்து மேல்)
02 – 20 அழியா நினைவுகளுக்கு உரியது (குழம்பி வருகிறது)
20 – 26 இவ் வழிபாடு, உளவியல் ரீதியாக நோக்கும் போது மிகப்பலனை அளிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்
21 – 33 அடுக்குத்தளக் கட்டுமானத்துடன் கூடியது எனவும் பொருள் தரும் (கீழிருந்து மேல்)
12 – 36 வேதவழி வந்த புராணங்களினாலும் தோற்றம் பெற்றது

TRT தமிழ் ஒலி · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 273

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 272 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்

திருமதி.சொரூபி மோகன்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 272 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 அர்ப்பணம்
07 – 09 நெற்றி
15 – 17 நிழல்
19 – 21 கடல்
22 – 24 வெட்டி
25 – 28 நஷ்டம்
31 – 34 கண்ணீர்
34 – 35 நீர்
35 – 36 நீதி

மேலிருந்து கீழ்

01 – 25 அறிமுகம்
14 – 26 பாடல்
05 – 17 நாணல்
06 – 24 வெள்ளம்
30 – 36 சேதி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 272 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திரு.ஸ்ரீகுமரன் சசிகுமார், யாழ்ப்பாணம், இலங்கை
திரு.திருமதி.உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திரு.கனகசுந்தரம் , ஜேர்மனி
திருமதி.தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 272ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...