Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 206 (23/12/2018)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 206 ற்கான கேள்விகள் 

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 26,32

இடமிருந்து  வலம்

01 – 04  தனித்துவமாகவோ பண்பாட்டு ரீதியாகவோ அமையக்கூடிய இது அடையாளம் காட்டுவது

08 – 10 புரிந்து கொள்ள கூடிய ஞானம்

16 – 17 தூய்மைக்கு எதிரான இது பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியது.

20 – 21 கணிப்பொறியின் பயன்பாட்டுடன் இணைந்த பொருட்களுள் ஒன்று (பாடல் இல்லை ,வலமிருந்து இடம்)

22 – 24 வீக்கம் அல்லது வலி நிவாரணியாகவும் அமையும்.(குழம்பி வருகிறது)

27 – 29 ஒரு வகையில் பேறு எனவும் கொள்ளலாம்.(வலமிருந்து இடம்)

33 – 36 வலியவர்களாக இருந்தாலும் எளியவர்களுக்கு துன்பம் செய்யாமை

மேலிருந்து கீழ்

07 – 31 மன அழுத்தம் ஏற்படவும் தீய விளைவுகள் ஏற்படுத்தப்படவும் ஏதுவானது.

08 – 20 உணர்வுடன் ஒன்று பட்ட இது குற்றவியல் ஆய்வுடனும் தொடர்புடையது.

03 – 27 உரிய தருணம் தவறுதல் அல்லது தகுந்த அக்கறை செலுத்தாமை (பாடல் இல்லை ,குழம்பி வருகிறது)

04 – 28 ஒப்பீட்டுக்கு அல்லது மட்டுப்படுத்தும் அளவீட்டுக்குரியது.(குழம்பி வருகிறது)

05 – 17 இசையின் ஆதாரம் (கீழிருந்து மேல்)

06 – 24 இயற்கை முறையிலான விவசாய செய்கைக்கும் பயன்படும் (கீழிருந்து மேல்)

24 – 36 உடலுக்கு புத்துணர்ச்சியையும் கண்களுக்கு குளிர்ச்சியையும் தருவது என அறியப்பட்டாலும் மனக் களைப்பினையும் ஏற்படுத்தும் என                        ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 205 ன் விடைகள் 

இடமிருந்து வலம் 

01 – 06 ஒப்பந்தம்

10 – 12 பாதம்

14 – 15 பாய்

21 – 22 வரி

25 – 29 கலவரம்

31 – 36 அத்துமீறல்

மேலிருந்து கீழ் 

01 – 13 ஒற்றை

19 – 31 அகம்

14 – 20 மெய்

03 – 21 பரிபாஷை

10 – 28 தாவரம்

17 – 35 முற்றம்

06 – 24 யுத்தம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 205 ற்கான சரியான  விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்

திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி

திருமதி. பிறேமா கைலாயநாதன்,  பிரான்ஸ்

திருமதி. கமலவேணி நவரட்ணராஜா,  பிரான்ஸ்

திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி

திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி

திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி

திருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி

திருமதி. விஜி பாலேந்திரா,  பிரான்ஸ்

திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி

திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம்,  சின்ஸ்ஹெய்ம் யேர்மனி

மற்றும் இணைந்து கொண்ட நேயர்கள்

திருமதி. லாலா ரவி

திரு.சுந்தரம்பிள்ளை கனகசுந்தரம்.

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 205 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...