Sunday, December 23rd, 2018

 

நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்

1978ல், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ‘தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஒருவர் பைத்தியக்காரராக இருந்தால் என்ன நடக்கும்’என லங்காசமசமாஜக் கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா கேள்வியெழுப்பியிருந்தார். சிறிலங்காவில் தற்போதுஅரசியற் குழப்பங்கள் இடம்பெற்றபோது இந்த வினாவானது மீண்டுமொருமுறை நினைவுகூரப்படுகிறது. சிறிலங்காவின் அரசியல் சீர்திருத்தத்தில் ஏற்பட்ட இந்த இடைவெளியானது இன்னமும் நிரப்பப்படவில்லை. அரசியல் சீர்திருத்தத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இப்பிரச்சினைக்கு இவை எவ்விதத்திலும் உதவவில்லை. சிறிலங்காவின் முதலாவது நிறைவேற்று அதிபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன முட்டாளல்ல, ஆனால் அவர் மோசமான ஒரு சந்தர்ப்பவாதியாகத் திகழ்ந்துள்ளார். 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனஅரசியல் சாசனத்தை வரைந்த போது அவர் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களை அடைவதை நோக்காகக் கொண்டிருந்தார். அதன் பின்னர் இந்தஅரசியல் சாசனமானது 13 தடவைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இவர் வயதுமுதிர்ந்த,தலைக்கனம் பிடித்தஅரசியல்வாதியாகவும் திகழ்ந்துள்ளார். மூன்றாம் உலக நாடுகள் எதிர்நோக்கும் முதன்மையான பொருளாதார அபிவிருத்திசார் பிரச்சினைகளைமேலும் படிக்க…


52 நாள் ஆட்சிக் குழப்பத்தின் பின்விளைவுகள் – நிலாந்தன்

‘மதம் தத்துவம் ஆகியவற்றில் மட்டுமல்ல சமகால அரசியல் மற்றும் தார்மீக வாழ்விலும் நாங்கள் புதிய அறம் சார் நோக்கு நிலைகளை மீளச் சிந்திக்கவும் மீட்டுப் பார்க்கவும் மீள உருவாக்கவும் வேண்டிய தேவை இருக்கிறது.’ – பேராசிரியர்.மைத்ரீ விக்ரமசிங்க (ரணில் விக்ரமசிங்கவின் துணைவி) 52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் முடிவிற்கு வந்துவிட்டது. இதன் விளைவுகளைப் பின்வருமாறு தொகுக்கலாம். முதலாவது விளைவு- மைத்திரியை அது நவீன துக்ளக் மன்னனாக வெளிக்காட்டியிருக்கிறது. இலங்கைத்தீவை இதுவரையிலும் ஆண்ட அனைத்துத் தலைவர்களிலும் அதிகம் பரிகசிக்கப்பட்ட கேவலமாக விமர்சிக்கப்பட்ட ஒரு தலைவராக அவர் காணப்படுகிறார். உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் அவரைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த இமேஜ் படு மோசமாக நொறுங்கிப் போய்விட்டது. மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண் செயற்பாட்டாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்; ‘2015ல் பொது வேட்பாளர் இப்பொழுது பொது எதிரி’ என்று. சமூக வலைத்தளங்களில்மேலும் படிக்க…


காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி மக்கள் நலனிற்கு எதிரானது: பிரதமர் மோடி சாடல்

காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியானது மக்கள் நலனை மறந்து தமது சுயநலத்திற்காக அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார். இதன்போது மத்திய சென்னை, வட.சென்னை, திருச்சி, மதுரை மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியிருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “நகரமயமாக்கலை சவாலாக கருதாமல், எமக்குக் கிடைத்த வாய்ப்பாக கருத வேண்டும் எனவும், அடுத்த 20 ஆண்டுகளில் வேகமாக வளரும் நகரங்களின் சிறந்த 10 பட்டியலில் இந்தியாவில் உள்ள நகரங்கள் தான் இடம்பெறும். இதில், தமிழகத்தில் உள்ள 3 நகரங்கள் இடம்பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எதிர்வரும் காலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல், எய்ம்ஸ் மருத்துவமனையும் மதுரையின்மேலும் படிக்க…


இந்தோனேசிய சுனாமி அனர்த்தம் : உயிரிழந்தவர்களை அடையாளம் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின் பின்னர் ஏற்பட்ட பாரிய சுனாமி அலைகளை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்தது. அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக இருப்பதன் காரணமாக உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்ட ஜாவா மற்றும் சுமாத்ரா தீவுகள் இன்னமும் நீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், அனாக் கரகட்டு எரிமலை தொடர்ச்சியாக குழம்புகளை வௌியிட்டு வருவதால் நீருக்கடியில் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக அதிகாரிகளை மேற்கோட்காட்டி ஊடகங்கள் இன்று செய்தி வௌியிட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும், கட்டடங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னறிவித்தல்கள் விடுப்பதற்கு முன்னதாக சுனாமி தாக்கியதன் விளைவாக பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களையும், உயிரிழந்தவர்களையும் அடையாளம் காணும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்தோனேஷிய அனர்த்த மேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று மாலை 6 வரைமேலும் படிக்க…


அற்ப சலுகைகளுக்காக நாம் விலைபோகக்கூடாது: மயூரன்

எமக்கு கிடைக்கும் அற்ப சலுகைகளுக்காக நாம் கடந்த 30 வருடகால அழிவுகளை மறந்து விலைபோகக்கூடாது என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் குறிப்பிட்டுள்ளார். வவுனியா பழைய கற்பகபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு திணைக்களங்களின் ஊடாக எமது இருப்பிடங்களைக் கையகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அதற்காக அரசாங்கத்தின் சார்பில் பல காரணங்களைக் கூறிக்கொண்டு வருகின்றார்கள். அதற்காக நாம் எமது பூர்வீக நிலங்களை விட்டுக்கொடுக்கக்கூடாது.சில இடங்களில் சில அற்ப சலுகைகளுக்காக நாம் எமது உரிமைகளைத் தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எமது தலைமைகளின் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தினை நாம் மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு நாம் அனைவரும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும்” எனமேலும் படிக்க…


நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதமானது எனில் தொடர்ந்து வரும் தேர்தலும் சட்டவிரோதமானதே: ஐ.தே.க.

நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதமானது என்றால் அதன் பின்வரும் தேர்தலும் சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநாயக்க தேர்களைச் சந்தித்து ஆசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். அதனை அடுத்து, மல்வத்துபீட மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தோம். அதன் களைப்பு இன்றும் உள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஆரம்பிக்கப்பட்டு 40 வருடம் ஆகின்றது. முதற்தடவையாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும் படிக்க…


வன்னி வெள்ள நிவாரண நிதி (TRT தமிழ் ஒலி வானொலி)

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்காக கரங்கோர்க்க TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளை கைவிடோம் நிகழ்ச்சியின் ஊடாக அழைப்பினை விடுகின்றோம் உதவி புரிய நல்மனம் உடையவர்கள் தொடர்பு கொள்ள அலுவலகத் தொலைபேசி இலக்கம் : பிரான்ஸ் நேயர்கள் : 01 48 37 16 75 or 06 51 95 03 40 ஏனைய நாடுகளிலுள்ள நேயர்கள் : 0033 1 48 37 16 75 or 0033 6 51 95 03 40       வன்னிக்கான வெள்ள நிவாரண நிதியை வழங்குவதானால் கிளிக் செய்க.  PAYPAL or CREDIT CARD


தமிழக மீனவர்களை விரட்டியபோது கடலில் தவறி விழுந்த இலங்கை வீரர் – 7 பேர் மீது வழக்கு

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். அப்போது இலங்கை கடற்படை வீரர் கடலில் தவறி விழுந்தார். அவரை கடலுக்குள் தள்ளி விட்டதாக ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து நேற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் இங்கு மீன் பிடிக்ககூடாது என மீனவர்களை எச்சரித்து விரட்டியடித்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர். அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகில் சோதனை செய்வதாக கூறி ஏறினர். அப்படி ஏறும்போது கடற்படை வீரர் ஒருவர் தவறி கடலில் விழுந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேலும் படிக்க…


இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி: 168 பேர் பலி- 745 பேர் படுகாயம்

எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. 745 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தி உள்ளது. மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. அதில் இருந்து புகை வெளியே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக்குழம்பும் வெளியாகியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையாக அதிர்ந்து குலுங்கியது. சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென ராட்சத சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 65 அடிமேலும் படிக்க…


நாடாளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த கொள்வனவு செய்கிறார் – சிறிநேசன்

தனது ஆட்சியைக் காப்பாற்ற பதவிகளையும், பணத்தையும் வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கொள்வனவு செய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அத்தோடு தனது ஆட்சியில் தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருக்குமென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். கம்பெரலிய திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசனினால் முன்மொழியப்பட்ட, மட்டக்களப்பு ஐயங்கேணி பாடசாலை வீதி செப்பனிடும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார். இங்து தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘கடந்த காலத்தில் எமது உறவுகள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்மை, பல யுவதிகள் விதவையாக்கப்பட்டமை போன்ற செற்பாடுகள் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே இடம்பெற்றன. அவரை நாங்கள் எவ்வாறு ஆதரிப்பது?மேலும் படிக்க…


சட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டவர்கள் அ.தி.மு.க.வில் இணைய தூது!

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்ட  4 உறுப்பினர்கள் அ.தி.மு.க.வில் இணைய தன்னிடம் தூது விட்டதாக தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். தேனி மாவட்டத்தில் இடம்பெற்ற அந்தக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தின்போதே அவர் இதனைக் கூறினார். கூட்டத்தின்போது கருத்துத்தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், “ஆண்டிப்பட்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்ட பிறகு 1088 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் இடைத்தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெறும். இதற்காக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோரை தொகுதி பொறுப்பாளர்களாக நியமித்துள்ளோம். தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்ட 18 உறுப்பினர்களில் 4 பேர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய தன்னிடம் தூதுவிட்டனர். தன்னை சந்திப்பதாகவும், தன்னிடம் இணைந்து கொள்வதாகவும் தெரிவித்தனர். அ.தி.மு.கவில் இணைவதற்காக முதல்வரிடம் செந்தில்பாலாஜி தூதுவிட்டார். செந்தில்பாலாஜி ராஜ துரோகிமேலும் படிக்க…


அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ஆலோசனை!

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 32ஆக அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமரைத் தவிர்த்து, அமைச்சரவையில் 30 பேரை நியமிக்கலாமென பிரதமர் கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் இல்லாத நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐ விட அதிகரிக்கக் கூடாதென்பதில் ஜனாதிபதி மைத்திரி உறுதியாக உள்ளார். எனினும், அதுதொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக பிரதமர் கூறியுள்ளார். இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் தேசிய அரசாங்கத்தை கொண்டுசெல்வது தொடர்பாக ஜனாதிபதியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. ஐ.தே.க. தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 106 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டுள்ள நிலையில், தேசிய அரசாங்கம் தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், ஐக்கிய மக்கள் சுதந்திரமேலும் படிக்க…


ஜனாதிபதியுடனான கருத்து முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – ரணில் நம்பிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான கருத்து முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என தாம் நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க கடந்த 16ஆம் திகதி பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 30 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலை கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார். இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரை செய்த சிலரது பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என தகவல் வெளியானது. இந்த விடயமானது பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பதை வெளிகாட்டும் வகையில் அமைந்திருந்ததாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனரை். இந்தநிலையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், “அமைச்சர்கள் நியமனத்தில் ஜனாதிபதியுடன்மேலும் படிக்க…


பாரிஸ் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேர்! நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

நேற்று பாரிசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2,000 பேர் கலந்துகொண்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மஞ்சள் ஆடை போராட்டக்காரர்கள் நேற்றைய தினம் பாரிஸ் நகரம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை சமூக ஊடகங்கள் மூலமாக ஒருங்கமைத்ததாக Eric Drouet என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தான் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் என்று கூறப்படுகிறது. மேலும் இவருடன் சேர்த்து 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் Catalan மக்களில் பலர் பிரெஞ்சு-ஸ்பெயின் எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் சோம்ப்ஸ்-எலிசேயிலும் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிசார் கண்ணீர் புகை சூடு மற்றும் தண்ணீரை பீச்சி அடிப்பது உள்ளிட்டவற்றை போராட்டக்காரர்கள் மீது நடத்தினர். இதேபோல் நாடு முழுவதும், சுமார் 31 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில்மேலும் படிக்க…


சுவிட்சர்லாந்தில் இரயில் ஒரு நிமிடம் முன்னதாக வந்ததால் வழக்கு தொடர்ந்த நபர்

சுவிட்சர்லாந்தில் வழக்கம் போல் வரும் இரயில் சரியான நேரத்திற்கு வரமால், அதற்கு ஒரு நிமிடம் முன்பு வந்ததால், ரயில்வே மீது ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். Sebastian Heitkamp என்பவர் சூரிச்சின் Enge ரயில் நிலையத்திலிருந்து Winterthur செல்வதற்காக, அடித்துப் பிடித்து ஓடி வந்தார். ரயில் புறப்படவேண்டிய நேரம் காலை 6.18, ஆனால் ரயில் 6.17க்கே புறப்பட்டு விட்டது. ஓடி வந்தும் Sebastian ஆல் ரயில் செல்வதை, வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. அடுத்த அரை மணி நேரத்திற்கு ரயில் எதுவும் இல்லை. முக்கியமான மீட்டிங் ஒன்றிற்கு செல்ல வேண்டியிருந்ததால், Sebastian டாக்சி பிடித்து அலுவலகம் சென்று சேர்ந்தார். நேரத்திற்கு அலுவலகம் சென்று விட்டாலும், அவருக்கு 180 சுவிஸ் ப்ராங்குகள் செலவானது. ரயில்வே நிர்வாகம் சம்பவம் நடந்ததை ஒப்புக் கொண்டாலும், முன்னரே புறப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை, அது நல்லதுதான்மேலும் படிக்க…


கனடாவில் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது!

கனடாவில் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Pas நகரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சிறுமி ஒருவர் கடந்த 14ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த சிறுமியின் பெயர் டார்சொ லைனிலி ஹைடன் (15) என தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பொலிசார் தற்போது 19 வயது இளைஞர் மற்றும் 15 வயது சிறுமியை கைது செய்துள்ளனர். இது குறித்து உயிரிழந்த லைனிலியின் சகோதரி செல்சா ஸ்டீலி கூறுகையில், கைது செய்யப்பட்ட இருவரும் லைனிலிக்கு பள்ளிக்கூடம் மூலம் ஏற்கனவே பழக்கமானவர்கள் என கருதுகிறேன். மூவரும் சேர்ந்து போதை மருந்துகளை உட்கொண்டிருக்கலாம். லைனிலியின் கொலை தொடர்பாக அவர்கள் இருவர் கைது செய்யப்பட்டது நிம்மதியளிக்கிறது என கூறியுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக வேறு யாரையும் தற்போது சந்தேகப்படவில்லை எனமேலும் படிக்க…


வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து, அதனை வாசித்த மேயர் ரோசி சேனாநாயக்க தொடர்பில் சர்ச்சை

கொழும்பு மாநகர சபைக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து, அதனை வாசித்த மேயர் ரோசி சேனாநாயக்க தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. ரோசி சேனாநாயக்க அதனை வாசிக்கும் போது வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பில் பிழையாக வாசித்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. வரவு செலவுத்திட்டத்தை வாசிக்கும் போது பிழைகள் ஏற்பட்டதாகவும், அதனை ஏற்றுக்கொள்வதாகவும் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள மொழியில் அறிவிக்கும் போது இந்த சிக்கலுக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் சமூக ஊடகங்களில் தனக்கு சேறு பூசும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் இது தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


77 வயதான மில்லியனர் ஒருவர் 32 வயதான இளம் பெண்ணை திருமணம்

பிரித்தானியாவில் 77 வயதான மில்லியனர் ஒருவர் 32 வயதான இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். முகமது இல்டப் ஷேக் (77) என்ற மில்லியனர் பிரித்தானியாவில் அரசியல்வாதியாக இருக்கிறார். இவர் மிக பெரிய தொழிலதிபரும் ஆவார். கென்யாவில் பிறந்து உகண்டாவில் வளர்ந்த முகமது பின்னர் பிரித்தானியாவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் குலி முரடோவா (32) என்ற பெண்ணுடன் முகமதுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டது. இதன்பின்னர் இது காதலாக மாறியது. இந்த காதலுக்கு முகமதின் மனைவி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரை முகமது விவாகரத்து செய்தார். இந்நிலையில் சமீபத்தில் தெற்கு லண்டனில் தன்னை விட 45 வயது குறைவான குலியை, முகமது திருமணம் செய்து கொண்டார். இதில் முகமதின் குடும்பத்தார் யாரும் கலந்து கொண்டார்களா என தெரியவில்லை. முகமதின் மகள் ஜலீனா, குலியைமேலும் படிக்க…


நாட்டில் நீடித்த அரசியல் குழப்பங்களுக்கு ரணில், சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரே காரணம் – தினேஷ் குணவர்த்தன

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஆயுத வழியில் பெற முடியாமல் போன தமிழீழத்தை இராஜதந்திர வழியில் பெறலாம் என்ற ஆசையுடனேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கியுள்ளதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ரணிலின் தீவிர விசுவாசியாக சுமந்திரனும், சுமந்திரனின் தீவிர விசுவாசியாக ரணிலும் உள்ளனர். அதை நாடாளுமன்றத்தில் நாம் நேரில் கண்கூடாகப் பார்த்துள்ளோம். ரணில் தலைமையில் புதிய அரசமைப்பு வரும் என்றும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணையும் என்றும், சமஷ்டி வழியில் தமிழ் ஈழம் மலரும் என்றும் சுமந்திரனும் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கனவு காண்கின்றனர். இந்த கனவு ஒருபோதும் நனவாகாது. ரணில்மேலும் படிக்க…


வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 206 (23/12/2018)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 206 ற்கான கேள்விகள்  அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 26,32 இடமிருந்து  வலம் 01 – 04  தனித்துவமாகவோ பண்பாட்டு ரீதியாகவோ அமையக்கூடிய இது அடையாளம் காட்டுவது 08 – 10 புரிந்து கொள்ளமேலும் படிக்க…


விஜயகலா மகேஸ்வரனின் இராஜாங்க அமைச்சுப் பதவி ஜனாதிபதியால் மீளப்பெறப்பட வேண்டும் – விமல் வீரவன்ச

விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது நியாயமா? இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறுகையில், வடக்கு – கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை மீண்டும் ஓங்கவேண்டும் என யாழில் பகிரங்க இடத்தில் இவ்வருட நடுப்பகுதியில் விஜயகலா மகேஸ்வரன் பேசியிருந்தார். இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நாம் குரல் கொடுத்தோம். அதையடுத்து, தான் வகித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சுப் பதவியை விஜயகலா இராஜிநாமா செய்திருந்தார். புலிகளை ஆதரித்தமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ரணில் அரசின்மேலும் படிக்க…


பிள்ளைகள் உள்ள அப்பாக்களுக்குத்தான் தெரியும் மக்களின் பிரச்சினைகள்- மஹிந்த ராஜபக்ச

பிள்ளைகள் உள்ள அப்பாக்களுக்குத்தான் தெரியும் மக்களின் பிரச்சினைகள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மித்தெனிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாம் சிறிய பௌத்த பிக்குகளுக்கு பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். அது தமிழாக இருக்கலாம், ஆங்கிலமாக இருக்கலாம் அல்லது பிரெஞ்சு மொழியாகக் கூட இருக்கலாம். மொழிக் கல்வியை கட்டாய பாடமாக அறிவித்து சிறிய பௌத்த பிக்குகளுக்கு அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். மொழிகளை கற்றுக் கொடுப்பதன் மூலம் பௌத்த மதத்தை விஸ்தரிக்க முடியும் என்பதுடன், மரித்துப் போகும் மொழிகளில் ஒன்றாகவே சிங்கள மொழி காணப்படுகின்றது. பௌத்த மதத்தின் ஊடாகவே சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். பிள்ளைகள் உள்ள தந்தையரினால் தான் நாட்டு மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியும், அதனையும்மேலும் படிக்க…


இந்தோனேசியாவில் சுனாமி தாக்கம் – 62 பேர் பலி -600க்கும் மேற்பட்டோர் காயம் -சிலர் காணாமல் போயுள்ளனர்

இந்தோனேகியாவில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக 62 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுண்டா ஸரெயிற்( Sunda Strait )கடல் பகுதியில் நேற்று இரவு இந்த சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இந்த அனர்த்தம் காரணமாக மக்கள் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் இந்த அனர்த்தம் காரணமாக 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் முதலில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்ட நிலையில் சுனாமி தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அந் நாட்டின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையம், சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு நிலஅதிர்வு காரணம் இல்லை எனவும் இதற்கு அனக் கரக்கோற்றோ (  Anak Krakatoa )எரிமலை வெடிப்பின்  விளைவாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது. குறித்த சுனாமி தாக்கத்தின் போது கடல் பகுதியில் நின்ற ஒருவர் அதனை காணொளியாகமேலும் படிக்க…


கிளிநொச்சி, முல்லைத்தீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குமாறு பணிப்புரை

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது


கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற காலநிலையால் 9475 குடும்பங்களை சேர்ந்த 31234 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இன்றைய கணக்கெடுப்பின் படி கிளிநொச்சி மாவட்டத்தில் 9475 குடும்பங்களை சேர்ந்த 31,234 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க்பபட்டுள்ளதாகவும் அந்த புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. கரைச்சி பிரதேச செயர் பிரிவில் 1021குடும்பங்களை சேர்ந்த 3589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 10 பாதுகாப்பான அமைவிடங்களில் 419 குடும்பங்களை சேர்ந்த 1523 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 7386 குடும்பங்களை சேர்ந்த 24032 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 11 பாதுகாப்பான அமைவிடங்களில் 821மேலும் படிக்க…


கதைக்கொரு கானம் – 19/12/2018

திரு.நாதன் ஐக்கிய இராச்சியம்


எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரச அதிகாரிகள் அதற்கு இடமளிக்கக்கூடாது – ஜனாதிபதி

சட்டவிரோத நடவடிக்கைகள், முறைகேடுகள் தொடர்பில் எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரச அதிகாரிகள் அதற்கு இடமளிக்கக்கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச அதிகாரிகளுக்காக ஜனாதிபதி என்ற வகையில் தான் குரல் கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி என்ற சொல்லை நாம் பயன்படுத்திய போதும்  நாட்டின் அரச நிர்வாகம் தூய்மையானதொரு நிர்வாகம் என்ற சான்றிதழை இன்னும் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் எதிர்ப்பார்க்கின்ற சிறந்த அரச நிர்வாகத்திற்காக உரிய முறையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களிடமும் கேட்டுக்கொண்டார். ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்துடன், தொடர்ந்தும் நாட்டு மக்களுடன்மேலும் படிக்க…


ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற ஒப்புதல்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவர், வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் 2017ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போயஸ் கார்டனை அரசுடைமையாக்கி, அதை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போயஸ் கார்டன் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் அறிவித்திருந்ததனையடுத்து போயஸ் கார்டனுக்கு உரிமை கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் தீபா சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக இடம்பெற்ற பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்மேலும் படிக்க…


கிளிநொச்சியில் நிலைமைகளைக் கையாள்வது தொடர்பில் கலந்துரையாடல்

சீரற்ற கால நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் ,தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனர்த்தத்தினால் ஏற்ப்பட்ட பாதிப்புக்கள் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது ,என்ன தேவைகள் இருக்கிறது என்ற பல்வேறு விடயங்கள் அவசரமாக ஆராயப்படுகின்றது இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் , மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் ,கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதி , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை , அரச அலுவலகங்களின் பிரதி நிதிகள் , பிரதேச சபைகளின் தவிசாளர்கள் அரசசார்பற்ற நிறுவனகளின் பிரதி நிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !