Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 257 (22/03/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 257 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 29

இடமிருந்து வலம்

01 – 05 வாழ்க்கைதுணைநலத்தில் இச்சொல் திருமணத்தை குறிப்பதாகவும் கூறப்படும்
08 – 10 பதில் அல்லது ஈடு
10 – 12 சகோதரம் எனும் சொல் உருவாக ஏதுவான சொல்லின் ஒருமை (வலமிருந்து இடம்)
14 – 17 பழங்குடியினர் இயற்கை அனர்த்தங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ள இதுவும் உதவியது (வலமிருந்து இடம்)
21 – 23 அடிப்படை ஒலிகளை உணர்த்தும் எழுத்துக்களை கொண்டதான இது ஆவி எனவும் அழைக்கப்படும் (வலமிருந்து இடம்)
26 – 28 தாவரத்திற்கு கூட உண்டு என்கிறது அறிவியல் (குழம்பி வருகிறது)
35 – 36 ஐம்புலன்களின் உணர்வில் சிலரின் அதிக ரசிப்புத்தன்மைக்குரியது ( வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 19 முன்பு அபூர்வமான நிகழ்வான இது இன்று அபரிமிதமானதாக மாறியுள்ளது
19 – 31 ஓரெழுத்திலும் பொருள் தரும் (கீழிருந்து மேல்)
14 – 32 பெரும் துளையிட்டு திருடுதலையும் குறிக்கும் (குழம்பி வருகிறது)
15 – 33 திறமைக்கான ஒப்பீட்டு அடிப்படையிலும் சிலருக்கு ஏற்படுவது (குழம்பி வருகிறது)
22 – 34 அழியும் அபாயம் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது (குழம்பி வருகிறது)
06 – 18 இணையாக கருதப்படும் பாங்குடையது
24 – 36 நியாயத்தின் சின்னம்

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 256 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 வெப்பம்
05 – 06 அடி
07 – 09 ஆயுள்
14 – 16 கேள்வி
19 – 21 பகல்
35 – 36 பானை

மேலிருந்து கீழ்

01 – 13 வெள்ளை
19 – 31 களவு
20 – 32 பட்டை
21 – 33 நிழல்
04 – 16 விஷம்
16 – 34 விடுமுறை
05 – 29 அரசியல்
18 – 36 ஒப்பனை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 256ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திரு.திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 256 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...