Main Menu

கொரோனா வைரஸின் புதிய அறிகுறி – வெளியிட்ட வைத்தியர்கள்!

கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளை பிரித்தானிய வைத்தியர்கள் வெளியிட்டுள்ளனர்.

வைரஸிற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தாத நோயாளிகள் மணம் மற்றும் சுவை உணர்ச்சிகளை இழந்தவர்களாக காணப்படுவார்கள் என பிரித்தானியாவின் காது தொண்டை மூக்கு தொடர்பான நோய்கள் குறித்த கற்கைகளிற்கான நிலையம்  தெரிவித்துள்ளது.

வைரஸ் கண்கள் மூக்கு மற்றும் தொண்டை ஊடாகவே நுழைகின்றன என்பதை ஏனைய நாடுகளின் ஆதாரங்கள் உறுதி செய்துள்ளன என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாங்கள் புதிய அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளோம், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாசனை மற்றும் சுவை உணர்வை இழந்தவர்களாக காணப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய அறிகுறிகள் இல்லாதவர்கள் ஆனால் வாசனை மற்றும் சுவை உணர்வை இழந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இளம் நோயாளர்களிடம் இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறிகள் தென்படாது என பிரித்தானியாவின் காது தொண்டை மூக்கு தொடர்பான நோய்கள் குறித்த கற்கைகளிற்கான நிலையம்  தெரிவித்துள்ளது.

பகிரவும்...