Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 256 (15/03/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 256 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 12

இடமிருந்து வலம்

01 – 04 புவிக்கான அபாயங்களில் ஒன்றான இதன் அதிகரிப்பை கட்டுப்படுத்த மறு சுழற்சி அல்லது மறுபயன்பாடும் உதவுகிறது.
05 – 06 செய்யுளின் வரியெனவும் கொள்ளலாம்
07 – 09 நிர்ணயிக்கப்பட்ட கால அளவு (வலமிருந்து இடம்)
14 – 16 ஏற்கனவே அறிந்த உறுதிப்படுத்தாத விடயத்தையும் இவ்வாறு குறிப்பிடுவர்
19 – 21 ஆந்தைக்கு ஆகாதென கருதப்படுவது (குழம்பி வருகிறது)
35 – 36 மூலமாக மண் பயன்படுத்தப்படும் போது ஆரோக்கியம் தருவதாகவும் அழகியல் வடிவங்களாகவும் அமைவதுண்டு

மேலிருந்து கீழ்

01 – 13 அறிக்கை எனும்போது பிரச்னைக்குரிய ஒரு விடயத்தை குறித்த தமது நிலைப்பாட்டை அரசு வெளிப்படுத்துதல்
19 – 31 கையோடு சேரும் போது முழுமையாக அகப்படும் நிலையை உணர்த்தும்
20 – 32 சில பொருட்களில் பெரியதாகவும் அகலமாகவும் அமைவதையும் கூறலாம்
21 – 33 மற்றொருவரின் தயவையும் குறிக்கும் (கீழிருந்து மேல்)
04 – 16 சிலவகை மருந்து தயாரிப்பிற்கும் பயன்படுவதுண்டு (கீழிருந்து மேல்)
16 – 34 ஓய்விற்கான அனுமதி எனினும் அவசர காலத்துக்கும் பொருந்தும்
05 – 29 கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் ஆனது
18 – 36 அதிகமாகும் போது சிலருக்கு உயிராபத்தையும் ஏற்படுத்தும்

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 255 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 அடையாளம்
08 – 10 வரவு
10 – 12 சரடு
14 – 16 அன்பு
21 – 23 தரிசு
25 – 26 சேய்
35 – 36 மழை

மேலிருந்து கீழ்

01 – 19 அளாவல்
14 – 32 வாய்ப்பு
21 – 33 பேச்சு
28 – 34 பாதை
05 – 35 மந்தகாசம்
06 – 24 விடுகதை
30 – 36 குழை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 255ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா , பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திரு.திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 255 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...