Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 251 (09/02/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 251 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 21

இடமிருந்து வலம்

01 – 05 சட்டம் நீதிக்குட்படாத நியாய தர்மம்
07 – 09 இயக்கம் குறித்த அளவு (குழம்பி வருகிறது)
10 – 12 தொடரும் வழக்கு
13 – 15 அகந்தையை அழிக்கும் என்பது ஆன்மீக விளக்கம் (வலமிருந்து இடம்)
27 – 28 இறந்த காலத்தின், நிஜம் அல்லது கற்பனை (வலமிருந்து இடம்)
33 – 36 சோகம் மறைக்கும் முகமூடி (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 13 அளவுக்கு மீறினால் ஆரோக்கியக் குறைபாடு எனலாம்
19 – 25 ஒரு வகை ஒழுங்கில் அமைந்த தொடர்ச்சி (கீழிருந்து மேல்)
25 – 31 முதிர்ச்சியின் ஆரம்ப அறிகுறி
08 – 32 அடிப்படை நிலை (கீழிருந்து மேல்)
10 – 22 சுய உணர்வு
22 – 34 எண்ணங்களின் காட்சி (குழம்பி வருகிறது)
05 – 29 குறிக்கப்பட்ட அம்சங்களின் ஒத்திசைவு (கீழிருந்து மேல்)
06 – 18 ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலுக்குரியதான இது அகத்திணையில் காதலுக்கானது (குழம்பி வருகிறது)
18 – 36 குதிக்கால் நரம்பினை தொடும் போது, அதன் வழி , மூளைக்குச்செல்லும் உணர்ச்சியை கட்டுப்படுத்தும் குணம் உடையது என்பதாலேயே இதனை அணியும் வழக்கத்தை முன்னோர்கள் ஏற்படுத்தியதாக கருத்து உண்டு (குழம்பி வருகிறது)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல250 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 03 கொள்கை
04 – 06 சிமிழ்
14 – 17 விளக்கு
22 – 24 முல்லை
26 – 28 சிப்பி
31 – 33 மேற்கு
34 – 36 தொடர்

மேலிருந்து கீழ்

07 – 19 வசம்
25 – 31 மேடை
14 – 26 குச்சி
03 – 09 தோகை
11 – 29 விக்கல்
12 – 24 கவலை
30 – 36 ஈர்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 250ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா , பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மன்
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மன்
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.சொரூபி மோகன் சுவிஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன் , ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 250 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...