Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 249 (26/01/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 249 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 27

இடமிருந்து வலம்

01 – 06 சம்பந்தப்பட்டவர்களுக்கு மாத்திரம் தெரிந்திருப்பது 

09 – 12 மீண்டும் மீண்டும் கூறப்படும் போது சலிப்புத்தருவதற்கும் பொருந்தும் (வலமிருந்து இடம்)

14 – 16 இதனை நோக்குமிடத்து மனிதர்களுக்கும்  விலங்குகளுக்கும் இடையே வேறுபாடு உண்டு (வலமிருந்து இடம்)

19 – 22 ஒருவரின் குணநலன் சார்ந்த மதிப்பீட்டையும் குறிக்கும் (குழம்பி வருகிறது)

28 – 29  இதன் மேற்பரப்பிலுள்ள இயற்கை வளங்களை அறிய செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகிறது.

31 – 34 பழி தீர்க்கும் எண்ணம் அல்லது செயல் (குழம்பி வருகிறது)

34 – 36 ஒன்றைக்குறித்து, தேவை கருதி வழங்கப்படும் வழி முறை
(குழம்பி வருகிறது)

மேலிருந்து கீழ்

01 – 31 வரையறுக்கும் தன்மை 

02 – 20 விளைவுக்கான ஆதாரம் (குழம்பி வருகிறது)

14 – 32 குறிப்பிட்ட செயல் தொடர்ந்து நிகழ்வதைக் காட்ட பயன்படும் இடைச்சொல் (கீழிருந்து மேல்)

09 – 21 எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகளால் தாயகத்திலும் அருகி வருவது 

11 – 29 மிகுந்த வேகத்திற்கு ஒப்பானது (கீழிருந்து மேல்)

06 – 30 பேரளவான  வெப்பசக்தி, தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால் உருவாகும் (கீழிருந்து மேல்)

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல248 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 சாத்தியம் 

09 – 11 சேட்டை 

15 – 17 பூட்டு

20 – 24 பம்பரம் 

25 – 27 நகம் 

27 – 29 மௌனம் 

32 – 34 முகில் 

34 – 36 மணல் 

மேலிருந்து கீழ்

01 – 07 சாவி 

07 – 19 கேள்வி 

02 – 20 யுத்தம் 

20 – 32 முகம் 

03 – 15 திட்டு 

12 – 24 மாயம்  

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 248ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.ஜெயந்தி சதீஸ்வரன் , ஜேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன் , ஐக்கிய இராச்சியம்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 248 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...