Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 235 (22/09/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 235 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 19,35

இடமிருந்து வலம்

01 – 05 மனித மனத்தை ஆராய்தல்
08 – 10 குறைந்து போதலையும் குறிக்கும் (வலமிருந்து இடம்)
26 – 27 சுவாசம் தொடர்பான நோய்களும் ஏற்பட ஏதுவாகும் (வலமிருந்து இடம்)
27 – 30 புலன்களுக்கு ஓய்வு கொடுக்கும் நிலை (குழம்பி வருகிறது)
31 – 33 சீர்குலைவு அல்லது பாதிப்பை உண்டாக்கும் விளைவு (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 13 வெயில் புகழ் இவற்றுடனும் பொருந்தி வரக்கூடியது
25 – 31 தீங்கு என பொருள் தரும்
02 – 20 தெளிவு படுத்தல் அல்லது சுத்தம் செய்தலையும் குறிக்கும் (குழம்பி வருகிறது)
15 – 27 கலப்பு அற்ற உன்னதமானது (கீழிருந்து மேல்)
16 – 34 பெரியவர்களுக்கானால் மரமாகவும் சிறுவர்களுக்கானால் விளையாட்டு தளமாகவும் அமையும்
05 – 23 சங்ககால கவிதைகளில் பெண்மையின் மென்மையை இதனுடன் ஒப்பிடுவது வழமை (கீழிருந்து மேல்)
06 – 24 பிறருக்கானதானால் சிலருக்கு மகிழ்ச்சியும் கொடுக்கும் (கீழிருந்து மேல்)
24 – 36 கண்ணுக்கு புலப்படாமலும் இருக்கக்கூடியது.

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 234 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 ஒத்திகை
08 – 10 குத்து
13 – 14 மறு
21 – 23 ஆழம்
25 – 26 கலை
32 – 34 வெள்ளி

மேலிருந்து கீழ்

01 – 13 ஒன்று
13 – 19 சாறு
14 – 26 மழலை
03 – 21 ஆரத்தி (ஆராத்தி)
21 – 33 ஆயுள்
05 – 23 உருவம்
23 – 35 நடம்
06 – 18 பூசல்
18 – 30 எழில்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 234ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன் , ஜேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திருமதி.சித்திரா பவன் நோர்வே
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 234 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...