Main Menu

ஐ.எஸ். கொடூரவாதிகளால் கொன்று குவிக்கப்பட்ட யாசிதி அகதிகள் – தப்பியவர்களின் வாக்குமூலம்

கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து தப்பித்து ஈராக்கின் சின்ஜர் மலைப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான யாசிதி அகதிகள் வெளியேறி அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில் இந்த அகதிகள் இன்று புதியதொரு வாழ்வை ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலான அகதிகள் மெல்போர்னுக்கும் சிட்னிக்கும் இடையில் உள்ள வக்கா வக்கா (Wagga Wagga) என்ற பகுதியில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

எனினும் இன்னும் ஆயிரக்காணக்கான தமது உறவினர்கள் ஈராக்கில் உள்ளதாகவும் அவர்களுக்கு உதவுமாறும் குறித்த அகதிகள் அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.

ஈராக்கின் சின்ஜர் மலையிலிருந்து வெளியேறிய லைலா தனது அனுபவத்தை பகிரும் போது, “ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஏராளமான ஆண்களையும் குழந்தைகளையும் கொடூரமாக கொன்றது.

எமது பிரதேசங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். வந்த பிறகு, நாங்கள் மலைப் பகுதிக்கு தப்பிச் சென்றோம். குடும்பத்துடன் மலையில் வசித்த நாங்கள் உணவின்றி தண்ணீரின்றி இருந்தோம். ஐந்து நாட்கள் நடந்தே சென்ற நிலையில் குர்தீஸ்தானை அடைந்தோம்.

நாங்கள் அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பாக உணர்கிறோம். இப்படி பல அகதிகள் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் அவுஸ்ரேலியாவில் இருக்கிறார்கள்” என்றார்.

அண்மையில் வக்காவில் பேரணி ஒன்றை நடத்திய யாசிதி அகதிகள், ஈராக் முகாம்களில் தங்கியுள்ள உறவினர்களுக்கு அவுஸ்ரேலியா உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களுக்கு நடந்தவற்றை நிறுத்த தங்களுக்கு நீதி வேண்டும் எனக் கூறும் யாசிதி அகதிகள் ஈராக்கில் உள்ள மக்களின் நிலை குறித்து வருத்தம் கொண்டுள்ளனர்.

சுமார் 3,000 யாசிதி அகதிகளுக்கு அவுதிரேலியாவின் மனிதாபிமான திட்டத்தின் கீழ் விசா வழங்கப்பட்டுள்ளது. இவர்களைப் போல் மேலும் பல யாசிதிகளுக்கு தஞ்சமளிக்கமாறும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பகிரவும்...