Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 225 (19/05/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 225ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரம் – 17

இடமிருந்து வலம்

01 – 04 சில குறிப்பிட்ட மதங்களில் வாழ்வின் முடிவை உணர்த்தும் இது புரட்சிக்கானால் உரத்துடன் தொடர்பு படும்.

04 – 06 இதனை வைத்து ஒருவரின் ஒட்டுமொத்த உருவத்தை அறிந்து கொள்ள முடியும் என கண்டறிந்தனர் (வலமிருந்து இடம் )

09 – 11 தவறுகள் மீண்டும் ஏற்படாது, ஏற்படும் அனுபவம் எனவும் எடுத்துக் கொள்ளப்படும் (குழம்பி வருகிறது)

20 – 24 ஆதி காலத்தில் இதற்கு ஒப்பீடாக சூரியனின் நகர்வு உதவியது (குழம்பி வருகிறது)

26 – 29 வெளிப்படையாக தெரியாத தூண்டுதல் எனவும் கொள்ளலாம் (குழம்பி வருகிறது)

31 – 32 மிக அற்பமானதையும் குறிக்க இந்த சொல்லை சிலர் பயன் படுத்துவர்

33 – 35 ஐம்புலன்களின் உணர்வுகளுள் ஒன்று

மேலிருந்து கீழ்

01 – 13 மற்றொருவரை அல்லது மற்றொன்றை நினைவு படுத்தும்

13 – 25 ஒரு வித மயக்கம் (கீழிருந்து மேல்)

02 – 20 விளைவுகளை தோற்றுவிப்பது அல்லது அதற்கு ஆதாரமாக இருப்பது (கீழிருந்து மேல்)

03 – 15 தொல் பொருட்களில் ஒன்றாகவும் உள்ள இது முற்கால வணிகத்திற்கு உறுதுணை புரிந்துள்ளது

10 – 34 ஒரு வகையில் உறுதியுள்ள நிலை (குழம்பி வருகிறது )

12 – 24 சொல்லாமல் சொல்லக்கூடியது

30 – 36 பாசாங்கு எனவும் பொருள் தரும்

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 224 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 போர்க்களம்

08 – 10 வயல்

17 – 18 விதி

19 – 21 உடமை

27 – 29 காலம்

31 – 34 உயர்வு

34 – 36 உரிமை

மேலிருந்து கீழ்

01 – 25 போராட்டம்

02 – 14 துயர்

20 – 32 உயிர்

04 – 22 கல்லறை

11 – 29 காவியம்

06 – 24 உதிரம்

24 – 36 உண்மை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 224ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி .சொரூபி மோகன் , சுவிஸ்
திருமதி.ஜெயசுதா ராஜன் சுவிஸ்
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி.சித்ரா பவன் , நோர்வே
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி.விஜி பாலேந்திரா, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
திரு . திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 224ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...