Main Menu

இலங்கைக்குள் சீனாவின் உளவுத்துறை நுழைந்ததாக அமெரிக்காவிற்கு தகவல்

இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை எதிர்ப்பதற்கு நாட்டுக்குள் வலுவான தலையீடுகளை மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனக்கு அதிகமான அமெரிக்க இராணுவ உதவி வழங்க அமெரிக்கா தயாரானது.

குறிப்பாக இந்த இராணுவம் மூலம் இலங்கையில் உள்ள சீனாவின் நிலைகளை உளவு பார்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ இலங்கைக்குள் சீனாவின் உளவுத்துறை நுழைந்ததாக அமெரிக்காவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் ஒரு சீன இராணுவ பிரசன்னம் கொண்டிருப்பதாகக் அமெரிக்காவின் குற்றசாட்டுக்களை மறுத்துள்ளது, ஆனால் அமெரிக்கா நம்பவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து பயங்கரவாத்தைனை ஒழிக்க இலங்கையுடன் இணைந்து செயற்பட தயார் என அமெரிக்கா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. இதனை அடுத்து வெளிவிவகார அமைச்சர் அமெரிக்கவிக்கு விஜயம் சென்றதின் பின்னர் ஊடக அறிக்கை வெளியிட்டது.

அதில் வொஷிங்டனில் நடைபெற்ற மூன்றாவது அமெரிக்க-இலங்கை கூட்டு பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்காக வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா சென்றிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் கூட்டு இராணுவ நடவடிக்கைகள், இலங்கை அமைதிகாப்பு நடவடிக்கைகள், இலங்கை அதிகாரிகள் மனித உரிமைகள் பயிற்சி, மற்றும் அமெரிக்க கப்பல்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் வருகைகள் போன்ற நடவடிக்கைகளுக்கு இரு அரசாங்கங்களும் தொடர்ந்து வரவேற்றுள்ளன. இதேவேளை ஏற்கனவே இருநாடுகளும் கூட்டு இராணுவ ஒத்துழைப்பை விரிவாக்க உடன்படுள்ளன.

இந்நிலையில் இலங்கையில் சீனாவின் உளவுத்துறை தொடர்பாக பாதுகாப்பு அமைச்சிடம் வினவியபோது, “இலங்கையில் இயங்கும் சாத்தியமான சீன உளவுத்துறை பற்றி அமெரிக்கா அறிந்திருந்தது என்றும் ஆனால் அது தேசிய பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக பார்க்கவில்லை.” என்றும் தெரிவித்துள்ளது.

பகிரவும்...