Main Menu

“ஓய்வூதிய சீர்திருத்தத்தில் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை!” – ஜனாதிபதி மக்ரோன்

ஓய்வூதிய சீர்திருத்தத்தில் உள்ள அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத்தேவையில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆப்பிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மக்ரோன், நேற்று சனிக்கிழமை Congo நாட்டின் தலைநகரான Kinshasa நகரில் வைத்து இதனை மக்ரோன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பாக பல முறை கருத்துக்கள் தெரிவித்துள்ளேன். இது என்னுடைய ஜனாதிபதி பதவிக்காலத்தின் ஒரு அங்கம். இது தொடர்பாக நான் தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை. ஓய்வூதிய சீர்திருத்தத்தில் உள்ள அனைத்தையும் நிராகரிக்கத்தேவையில்லை. அதேபோல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவும் தேவையில்லை” என குறிப்பிட்டார்.

கடந்த நான்கு நாட்களாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது Angola, Congo போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளார்.  

பகிரவும்...