Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 325 (18/12/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 325ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் எதுவும் இல்லை

இடமிருந்து வலம்

01 – 06 மனித வாழ்வின் இலக்குதனை இயம்பும் இதனில் அறச்சிந்தனைகள் நிறைந்திருக்கும்
07 – 09 சில தருணங்களை பதிவு செய்யும் படம் (வலமிருந்து இடம்)
09 – 11 தொடர்ந்து நிகழ்தல்
14 – 15 நினைவிற்கான மாதிரி (வலமிருந்து இடம்)
20 – 22 கலாச்சார சிறப்பை உணர்த்தக் கூடிய இது மங்கல நிகழ்வுகளில் இன்றியமையாதது.
25 – 30 ஒப்பனை (வலமிருந்து இடம்)
31 – 33 மனத்திரையின் காட்சி
33 – 36 இதனையும் மதிக்க சிலர் தவறுகின்றனர் (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 19 அத்தியாவசியமானதெனினும் குறிக்கப்பட்ட முதியோருக்கானதெனில் வேதனைக்குரியது
15 – 27 சிறு பராயத்தில் கட்டுரைகளில் அதிகம் எழுத்தாக்கம் பெறுவது (கீழிருந்து மேல்)
10 – 22 மட்டத்தை குறைத்து பேசப்படும் போது கையாளப்படும்
11 – 23 நாட்டிய பாகத்தின் மிக முக்கியமானவற்றுள் ஒன்று (கீழிருந்து மேல்)
12 – 18 பிரிக்கப்படுவது என்றும் பொருள் தரும்
18 – 30 உலகநாடுகள் பலவற்றை பொறுத்தவரை தற்கால கட்டத்தில் முக்கியமானது (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 325

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 324ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 அபிஷேகம்
09 – 12 மஞ்சள்
20 – 22 ஞானம்
25 – 26 ஆணை
31 – 33 இரவு
33 – 36 இடுப்பு

மேலிருந்து கீழ்

01 – 19 அமாவாசை
19 – 25 ஆசை
02 – 14 பிளவு
09 – 21 மதம்
28 – 34 வீடு
05 – 23 வஞ்சம்
23 – 29 வழி
06 – 12 முள்
18 – 36 துரும்பு

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 324 ற்கான இந்த வார அதிஷ்டசாலி  திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி

திருமதி. சுபாசினி பத்மநாதன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 324 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி
திருமதி. வதனா தயாளன் பிரான்ஸ்
திரு. திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி. சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், ஜேர்மனி
திருமதி.ரஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திரு.கனகசுந்தரம், ஜேர்மனி
திரு. திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 324ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...