Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 323 (04/12/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 323ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் எதுவும் இல்லை

இடமிருந்து வலம்

01 – 05 வலம் வருதல்
08 – 11 புதுமைக்குள் அடக்கம் (குழம்பி வருகிறது)
13 – 15 ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட இதுவும் ஓர் காரணம்
15 – 16 சீரான ஒழுங்கு முறை (வலமிருந்து இடம்)
19 – 22 முடியாதென்பதை முடித்துக் காட்டுதல் எனவும் கூறலாம்
26 – 30 ஒன்று கூடுதல் (வலமிருந்து இடம்)
31 – 35 பட்டறிவு (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 13 இதனை உபயோகப்படுத்தும் போது நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஆன்மீகக் கூற்று
19 – 31 தோஷம் எனப்படும் இது எதிர்வினைக்குரியது
04 – 16 உலக சுழற்சியில் பெரும்பாலானோர் கடைப்பிடிப்பது (குழம்பி வருகிறது)
05 – 23 இலக்கிய இலக்கண முறையை பாதுகாக்க மற்றும் எழுதும், வாசிப்பு அறிவும் வளரும் என்பதே அறிமுகத்தின் நோக்கம் (கீழிருந்து மேல்)
06 – 24 எமது செயற்பாடுகளை தீர்மானிப்பது
24 – 36 பல்வேறு அளவுகள் வரையறுக்கப்பட்டாலும் தூரத்தை அளவீடு செய்த வேத கால அலகு (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலி குறுக்கெழுத்துப் போட்டி – 323

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 322ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 இராணுவம்
07 – 09 வீரம்
13 – 16 ஆபத்து
20 – 22 திக்கு
25 – 29 உறக்கம்
32 – 34 களம்

மேலிருந்து கீழ்

01 – 25 இரத்தம்
08 – 32 ஆதிக்கம்
04 – 22 துவக்கு
05 – 23 காவியம்
12 – 24 கதிரை
24 – 36 கவலை

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 322 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி. ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி. சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி. பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி. சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி. வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி. குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. சசிகலா சுதன்சர்மா, பிரான்ஸ்
திருமதி. ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி. சித்ரா பவன், நோர்வே
திரு. திருமதி. உதயன் மல்லி, ஜேர்மனி
திருமதி. பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி. தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி. சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திரு. திக்கம் நடா சுவிஸ்
திருமதி. ஜெயந்தி சதீஸ், ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 322ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...