Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 322 (27/11/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 322ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 06, 31, 35

இடமிருந்து வலம்

01 – 05 நாட்டைக் காத்துக் கொள்ளும் பணியே எனினும், காவு கொள்ளும் அணியானது
07 – 09 உயிர் துறக்கும் இடர் வரினும், நிலை தளராது நின்ற இதற்கில்லை நிகர் (குழம்பி வருகிறது)
13 – 16 எதிரிக்கு எதிரானால், இது நிச்சயம் நிதர்சனம் (குழம்பி வருகிறது)
20 – 22 குண்டு மழையில் குழம்பி ஓடும் போது சனம் மறந்து போகும்
25 – 29 எல்லை காக்கும் வீரர்கள், இல்லாமல் இழப்பது (குழம்பி வருகிறது)
32 – 34 மாண்ட மாவீரர் கண்ட பலிபீடம்

மேலிருந்து கீழ்

01 – 25 ஈழ மண்ணில் இதன் ஈரம் காயவில்லை இன்னும்
08 – 32 ஆணவ அதிகாரத்தின் அதர்ம அடக்குமுறை (குழம்பி வருகிறது)
04 – 22 நீதிக்கான போரெனினும் அகிம்சைக்குள் அடங்காது (குழம்பி வருகிறது)
05 – 23 இலக்கியங்கள் மட்டுமல்ல, இலக்கிற்காய் துயிலும் புகழுடலும் இதற்கிணைதான் (கீழிருந்து மேல்)
12 – 24 குரோதம் மிக்க துரோகிகளின் குறிக்கோள் (கீழிருந்து மேல்)
24 – 36 விடியலுக்காய் ஏங்கும் அகங்களில், முகங்களில்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 322

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 321ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 ஆடம்பரம்
08 – 11 தியாகம்
11 – 12 சதி
20 – 23 பட்டினி
27 – 30 பயணம்
31 – 33 புயல்
33 – 35 ஏவல்

மேலிருந்து கீழ்

01 – 19 ஆதாரம்
19 – 31 தும்பு
08 – 32 நாட்டியம்
03 – 21 பக்கம்
11 – 17 திசை
06 – 30 பரவசம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 321 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.லாலா ரவி, பிரான்ஸ்
திருமதி.சியாமளா சற்குமாரன் ஜேர்மனி
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.தேவி தனராஜ் பிரான்ஸ்
திருமதி சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி சாந்தி பாஸ்கரன் ஜேர்மனி
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திரு கனகசுந்தரம் ஜேர்மனி
திருமதி றஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திரு திக்கம் நடா சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 321ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...