Main Menu

துயிலுமில்லங்களை மீள ஒப்படைத்து மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு இடமளியுங்கள்! –

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் ஒப்படைத்து எமது மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் போரில் ஆகுதியாகிய மறவர்களுக்கு நினைவஞ்சலிச் சுடரினை ஏற்றிய பின் கருத்துரைக்கும் போதே இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட சடலங்களைக்கூட கிளறி எறிந்து இனவெறியைத் தீர்க்கவேண்டும் என்ற எண்ணம் இலங்கையின் அரச கட்டமைப்பில் வேரூண்டி இருக்கையில் நாடு முன்னேறிச் செல்வதற்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.

உலக அளவில் எதிரியாக இருந்த போதும் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு கௌரவமளித்து தூபிகளை அமைத்துள்ள போதும் இன்றும் கோப்பாய் உள்ளட்ட பல துயிலும் இல்லங்கள் இராணுவ முகாம்களாக உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...