Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 318 (17/04/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 318ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் –16, 26

இடமிருந்து வலம்

01 – 06 உற்பத்திப் பொருட்களை பெருமளவு ஏற்றுமதி செய்வதாலும் உண்டாகும்
08 – 10 தேசத்தின் இறையாண்மைக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது (வலமிருந்து இடம்)
10 – 11 உதட்டுச்சாயம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படும்
22 – 24 அந்தமான் தீவுகளில் இவை கருமை நிறத்தில் கிடைக்கப்பெறுவதாக கூறப்படுவதுண்டு (குழம்பி வருகிறது)
27 – 30 தொல்காப்பியம் காட்டும் எட்டு வனப்புகளுள் ஒன்று
31 – 34 வாய்மொழியாகக் கற்பிக்கப்பட்டே எழுத்து வடிவமானது

மேலிருந்து கீழ்

01 – 19 நமது உடலுக்கு தேவைக்கேற்றவாறு பயன்படுத்தாவிட்டால் உணவு சமிபாடு அடைவதைப் பாதிக்கும்
25 – 31 மனித இனத்தின் முதல் ஆடை (கீழிருந்து மேல்)
14 – 20 ஒரு வகைக்கூத்துக் கலையான இதற்கு ஆட்டுத்தோலில் வரைந்து வெட்டப்பட்ட உருவங்கள் பயன்படுத்தப்படுகின்றன
03 – 27 வளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக்கான ஓர் அங்கமாக பார்க்கப்படுகிறது (கீழிருந்து மேல்)
17 – 35 தாய் சேய் உறவில் மறக்க முடியாதது (குழம்பி வருகிறது)
06 – 18 மலரின் இளமைப்பருவங்களுள் ஒன்று (கீழிருந்து மேல்)
24 – 36 சங்க காலத்தில் மூவகையாக பிரிக்கப்பட்ட இது மண்வாசனையையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படுவது (குழம்பி வருகிறது)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 318 (17/04/2022)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 317 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்

திருமதி சசிகலா சுதன்சர்மா அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 317ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 வள்ளல்
04 – 06 புயல்
08 – 09 கூடு
16 – 17 நிலை
20 – 22 சாயம்
22 – 24 நீலம்
25 – 26 நொடி
32 – 36 தந்திரம்

மேலிருந்து கீழ்

01 – 13 வரவு
13 – 25 முடிவு
09 – 15 சூடு
04 – 16 நிழல்
16 – 34 நிம்மதி
11 – 17 மாலை
12 – 36 தாம்பூலம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 317ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திரு கனகசுந்தரம் ஜேர்மனி
திருமதி சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி சித்ரா பவன் நோர்வே
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்
திரு திருமதி உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி. அருணா விக்கினேஸ்வரன் நெதர்லாந்து
திரு திக்கம் நடா சுவிஸ்
திருமதி ரதிதேவி தெய்வேந்திரம் ஜேர்மனி
திருமதி சந்திரா கோபால் ஜேர்மனி
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.தேவி தனராஜ் பிரான்ஸ்
திருமதி ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 317ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...