Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 308 (23/01/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 308 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 09, 11, 23, 36

இடமிருந்து வலம்

01 – 04 ஆடம்பர அமைவிடங்களுக்கு பயன்படும் விலைமதிப்புள்ளது
05 – 06 உடல் நலத்திற்கான அளவு கோல் என்றும் கூறலாம்
14 – 16 தடுமாறுதலுக்கான அடைமொழி
16 – 18 அராஜகத்தின் வெளிப்பாடு (குழப்பி வருகிறது)
19 – 22 வடமொழிச் சொல்லான இதன் தமிழ் வடிவம் உறுப்பு என்பதாகும் (குழம்பி வருகிறது)
26 – 29 முடிந்தவரை தவிர்ப்பதே சிறந்தது (குழம்பி வருகிறது)
32 – 35 எட்ட முயற்சிப்பது (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 19 தொன்மையான நாகரீகங்கள் பல அழிந்தமைக்கு இதுவும் ஏதுவாகியது
19 – 31 குருதி உறைவின் காரணமாக ஏற்படும் இதன் சேதமே பக்க வாத நோய்க்கான காரணம் (கீழிருந்து மேல்)
08 – 32 எதிர்பார்ப்புடன் கூடிய இது வெளிப்படை அற்றதாகவும் சிலரிடம் காணப்படும்
04 – 22 எதுகை மோனை கொண்ட உரைநடை மொழியில் காணப்படும் பாங்கு (கீழிருந்து மேல்)
06 – 12 உடலமைப்புக்கு ஏற்றவாறு அமைந்தாலே அழகு பெறும் (கீழிருந்து மேல்)
18 – 30 தனக்கானால் அழிவுக்கானது (கீழிருந்து மேல்)

TRT தமிழ் ஒலி (F A C E Association) · வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி 308(23.01.22)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 307 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்

திருமதி.பிறேமா கைலாயநாதன் அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 307ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 04 வாடிக்கை
04 – 06 எதுகை
07 – 10 நன்கொடை
13 – 15 முத்து
19 – 20 தூது
21 – 23 கனவு
25 – 28 மாற்றம்
32 – 36 இளவேனில்

மேலிருந்து கீழ்

01 – 07 வாடை
08 – 20 கொத்து
04 – 10 நகை
10 – 28 நயனம்
11 – 23 கவிதை
18 – 36 செம்மல்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 307ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ரஜனி அன்ரன் ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.பத்மராணி ராஜரட்ணம், ஜேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.வதனா தயாளன் பிரான்ஸ்
திருமதி ஏஞ்சல் மார்சலின் ஜேர்மனி
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி தேவி தனராஜ், பிரான்ஸ்
திருமதி சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திரு கனகசுந்தரம், ஜேர்மனி
திரு திருமதி. உதயன் மல்லி ஜேர்மனி
திருமதி.சந்திரா கோபால், ஜேர்மனி
திருமதி ரஞ்சி ரவி ஐக்கிய இராச்சியம்
திரு திக்கம் நடா சுவிஸ்
திருமதி லாலா ரவி பிரான்ஸ்
திருமதி.பிலோமினா யோகினி, அன்ரன் பிரான்ஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 307 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...