Main Menu

2 பெப்ரவரி சுகாதாரக் கட்டுப்பாடுகள் குறைப்பு?

‘நம்பிக்கை என்றும் தளரவில்லை’ என பிரான்ஸ் அரசாங்கத்தின் பேச்சாளர் கப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார்.  சுகாதாரக் கட்டுப்பாடுகளை இலகுவாக்குவதற்கு, ஏற்கனவே குறிக்கப்பட்ட திகதிகள் கடைப்பிடிக்கப்படும் எனவும், டெல்டாவின் தொற்று வெகுவாகக் குறைவடைய ஆரம்பித்திருப்பதால், முதற்கட்டமாக பெப்ரவரி 2ம் திகதி சுகாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் இரண்டாம் கட்டமாக 16ம் திகதி மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் கப்ரியல் அத்தால் தொடரந்து தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இதில் எந்நத மாற்றங்களும் செய்யப்போவதில்லை எனவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் அத்தால் தெரிவித்துள்ளார். இது கொரோனத் தொற்றின் குறைவிற்காகவோ, அல்லது மக்களின் நலனுக்காவோ அல்லாது, தேர்தற் பிரச்சாரக் கூட்டங்களில் பெருமளவானவர்களை உள்வாங்குவதற்காகவே இந்த சுகாதாரக் கட்டுப்பாட்டுத் தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளாந்தம் நான்கு இலட்சம் அல்ல, 5 அல்லது 6 இலட்சம் தொற்றுக்கள் ஏற்பட்டாலும், எந்த அக்கறையும் இன்றி, அரசாங்கத்திற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒன்று மட்டுமே குறியாக உள்ளது. கட்சி, தேர்தல் அரசியல் பிரான்சிலும் மிக மோசமாக உருவெடுத்துள்ளது.

பகிரவும்...