Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 245 (15/12/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 245 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 5 ,29

இடமிருந்து வலம்

01 – 04 வாய்மொழி மட்டுமல்ல இணைய வழியும் உண்டு.
07 – 11 பிடிமானம் இல்லாதது எனவும் கருதலாம் (குழம்பி வருகிறது)
16 – 18 கற்பனை வளத்துடன் அமைந்தால் இரசிக்க கூடியது
(வலமிருந்து இடம்)
19 – 23 காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் கற்பிக்கப்படும் (குழம்பி வருகிறது)
25 – 27 வெண்மையெனில் உபசாரத்துக்குரியது
31 – 34 கவியால் உருவாகும் காலப்பதிவு (குழம்பி வருகிறது)
34 – 36 புலன்களை வெற்றி கொள்பவர் மாத்திரமே இப்பெயரின் சிறப்புக்குரியவர் (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 31 குறிக்கப்பட்ட சமூகத்தின் அங்கீகாரம் வேண்டி நிற்பது
08 – 26 சிலவகை கடல்வாழ் உயிரினங்களின் எலும்பிலிருந்து பெறப்படும் பெறுமதி மிக்கது (குழம்பி வருகிறது)
09 – 21 அடியொட்டி அமையும்
16 – 34 விடைக்கான வியூகம் (கீழிருந்து மேல்)
06 – 12 தடுப்பகமான இது மனதுக்கும் பொருந்தும்
24 – 36 சிக்கலற்றது

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 244ன் விடைகள்

இடமிருந்து வலம்

01- 06 அரவணைப்பு
08 – 09 கரு
16 – 17 கசை
25 – 29 அவசியம்
31 – 33 அம்பு

மேலிருந்து கீழ்

01 – 25 அரிதாரம்
14 – 32 ஓவியம்
03 – 21 வருவாய்
04 – 10 துணை
28 – 34 வலை
11 – 29 அக்கறை
29 – 35 அறை
06 – 18 புரவி
18 – 36 விடியல்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 244 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி.ராதா கனகராஜா
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
ஜெயந்தி, ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திரு.திக்கம் நடா, சுவிஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன்
திருமதி.பேபி கணேஷ்
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 244 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!