Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 242 (24/11/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 242ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 15, 27

இடமிருந்து வலம்

01 – 05 இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலகட்டத்தில் பலரையும் அச்சத்துக்குள்ளாக்கியது
08 – 11 நீரைத் தேக்கி வைக்கும் தடுப்பு (வலமிருந்து இடம்)
19 – 23 இயல்பான போக்கில் ஏற்படும் மாற்றம்
32 – 34 காற்றழுத்த குறைவினால் ஏற்படும்
34 – 35 கற்றல் எனும் வினைக்கான முன்னிலைக்குரியது
(வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 31 ஆதிக்கமற்ற நிலை (குழம்பி வருகிறது)
14 – 32 அழிவையும் ஏற்படுத்தக் கூடிய இது வேதகாலம் முதல் புனிதமானதாகவும் கருதப்படுகிறது
16 – 28 உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் அவசியமானது (குழம்பி வருகிறது)
11 – 35 கணிதத்திலும் மனிதத்திலும் உண்டு (குழம்பி வருகிறது)
06 – 18 அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் சக்தி (கீழிருந்து மேல்)
18 – 36 பக்கபலம்

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 241ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 05 அநியாயம்
09 – 12 மதிப்பு
14 – 16 தொல்லை
26 – 27 கண்
31 – 33 வேதம்

மேலிருந்து கீழ்

01 – 31 அகங்காரம்
02 – 14 நிழல்
15 – 27 கவலை
16 – 34 தொட்டில்
05 – 23 தர்மம்
23 – 29 தலை
18 – 36 கண்ணீர்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 241 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்
திருமதி.லாலா ரவி
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
ஜெயந்தி ஜேர்மனி
திருமதி.சசிகலா சுதன்சர்மா பிரான்ஸ்
திரு.கனகசுந்தரம் யேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா
திருமதி.விஜி பாலேந்திரா பிரான்ஸ்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி
திருமதி.ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்
திரு.திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 241 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!