வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 218 (17/03/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.
இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 218 ற்கான கேள்விகள்
அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 08, 20, 29
இடமிருந்து வலம்
01 – 06 பிடித்தமான செயற்பாடுகளையும் குறித்து நிற்கும்
10 – 12 கற்பனையின் வடிவத்துக்கு மட்டுமல்ல ஒப்பனைக்கும் பயன்படுகிறது (வலமிருந்து இடம்)
13 – 15 உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும் இதம் தரும் இது சுற்றுலா பயணிகளை அதிகம் கவரக்கூடியது.(குழம்பி வருகிறது)
21 – 22 பெயருக்கானால் தப்பு. வினையிற்கானால் தப்பித்தல் (வலமிருந்து இடம்)
25 – 27 அவசியமற்ற பிரச்சனை
31 – 33 திண்மையானது எனவும் பொருள் தரும் (வலமிருந்து இடம்)
34 – 36 சாதகமானது
மேலிருந்து கீழ்
01 – 13 சொல்லுக்கு அல்லது செயலுக்கு அர்த்தமாவது (குழம்பி வருகிறது)
19 – 31 நாட்டார் வழக்கில் பாவகைக்குரிய இது வேண்டுதலுக்குமானது
03 – 15 சமையலுக்கு பயன்படும், பதமான கலவையும் இப்பெயரால் அழைக்கப்படுவதுண்டு (கீழிருந்து மேல்)
10 – 34 மன உறுதியுடன் தொடர்புடைய இது ஐயப்பாட்டிற்கு எதிரானது (கீழிருந்து மேல்)
11 – 23 பரிசோதனைக்காக எடுக்கப்படும் பகுதியும் இவ்வாறு குறிப்பிடப்படும் (கீழிருந்து மேல்)
06 – 30 இதமும் இன்பமும் தரும் சந்தர்ப்பங்களில் வெளிப்படும் உணர்வு
வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 217 ன் விடைகள்
இடமிருந்து வலம்
01 – 04 பளிங்கு
04 – 06 குமிழ்
08 – 12 விருப்பம்
13 – 17 அர்த்தம்
21 – 24 சட்டம்
31 – 33 முதல்
மேலிருந்து கீழ்
13 – 31 அஞ்சல்
14 – 26 சுவர்
09 – 27 சத்தம்
04 – 34 குருதட்சணை
17 – 29 குடம்
12 – 18 விதை
24 – 36 பேதம்
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 217 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்
திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி
திருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி
திருமதி.பேபி கணேஷ் ,யேர்மனி
திருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி
திருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்
திருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா பிரான்ஸ்
திரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம், ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா பிரான்ஸ்
ஜெயந்தி , ஜேர்மனி
திருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி
திரு . திக்கம் நடா, சுவிஸ்
ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.சித்ரா பவன், நோர்வே
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 217 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!