Main Menu

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 265 (02/08/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 265 ற்கான கேள்விகள்

அடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 27,35

இடமிருந்து வலம்

01 – 06 வாழ்வியலுக்கான அனைத்து அங்கங்களும் கொண்டது
07 – 10 நேர், எதிர் மறைகளும் உண்டு (குழம்பி வருகிறது)
10 – 12 ஆக்கவும் அழிக்கவும் பயன்படும்
13 – 15 மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் இடையே யான பிணைப்பு
16 – 18 உதவும் பண்புடன் தொடர்பு படுத்தப்படுவது (வலமிருந்து இடம்)
21 – 23 இறைபதமெய்தியவர்களுக்கான மரியாதையாகவும் கடைபிடிக்கப்படுவது (பாடலில் ஒத்த கருத்து அல்லது அதனுடன் பொருந்தி வரக்கூடிய சொல் வருகிறது) வலமிருந்து இடம்
31 – 34 எதார்த்த தன்மையுடன் அமையும் போது சிறப்படைகிறது (வலமிருந்து இடம்)

மேலிருந்து கீழ்

01 – 13 தாய் சேய் இணைப்பின் புனிதத்தை சுட்டும் (கீழிருந்து மேல்)
13 – 31 கடவுளரைப்பற்றியெனில் சில மதத்தவரின் நம்பிக்கைக்கு எதிரானது
14 – 26 அழிவின் விளிம்பை எட்டிக்கொண்டிருக்கும் வகைகளுள் ஒன்று (குழம்பி வருகிறது)
16 – 34 அதிக ஈடுபாடு (கீழிருந்து மேல்)
17 – 29 பல்வேறுபட்டதான இது புரட்சியூடாகவும் அமைந்துள்ளது.(குழம்பி வருகிறது)
18 – 36 அளவுக்கதிகமாக ஏற்படும் போது நிரந்தர பார்வையின்மைக்கான அறிகுறியாக கருதப்படுகிறது

TRT தமிழ் ஒலி · குறுக்கெழுத்து போட்டி – 265 (02.08.20)

வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி இல 264 ற்கான இந்த வார அதிஷ்டசாலி திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி  .

திருமதி. ஜெயந்தி சதீஸ்  அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !

வானொலி குறுக்கெழுத்து போட்டி இல 264 ன் விடைகள்

இடமிருந்து வலம்

01 – 06 இலட்சியம்
07 – 10 நிதானம்
10 – 11 நிலை
13 – 16 மொத்தம்
25 – 28 அசரீரி
33 – 36 காரணம்

மேலிருந்து கீழ்

01 – 13 இனம்
13 – 31 தைரியம்
21 – 33 வாசம்
16 – 22 மொழி
11 – 23 எல்லை
06 – 30 மின்சாரம்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 264 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்

திருமதி.பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்
திருமதி.ஏஞ்சல் மார்சலின், ஜேர்மனி
திருமதி.ரஜனி அன்ரன், ஜேர்மனி
திருமதி.பேபி கணேஷ், ஜேர்மனி
திரு.கனகசுந்தரம், யேர்மனி
திருமதி.சுபாசினி பத்மநாதன், ஜேர்மனி
திருமதி.ராதா கனகராஜா, பிரான்ஸ்
திருமதி.சாந்தி பாஸ்கரன், ஜேர்மனி
திருமதி.பாரதி, ஜேர்மனி
திருமதி.கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்
திருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி
திருமதி.சியாமளா சற்குமாரன், ஜேர்மனி
திருமதி.ஜெயந்தி சதீஸ் , ஜேர்மனி
திருமதி.சித்ரா பவன், நோர்வே
திருமதி.ஜெனி அன்ரன், ஐக்கிய இராச்சியம்
திருமதி.ஜமுனா குகன், சுவிஸ்
திருமதி.சசிகலா சுதன் சர்மா, பிரான்ஸ்
திருமதி.குணநாயகி பசுபதி, பிரான்ஸ்
திருமதி.சொரூபி மோகன், சுவிஸ்
திருமதி.றஞ்சி ரவி , ஐக்கிய இராச்சியம்
திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் ,ஜேர்மனி
திரு.திக்கம் நடா, சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 264 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்!

பகிரவும்...